இன்றைய ராசிபலன் – 08 மே 2025

இன்றைய ராசிபலன் – 08 மே 2025

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தனம் தானியம் என்று செல்வ செழிப்பு உயர்ந்த நிலைக்கு செல்லும். ஒரு சந்தோஷம் மனதிற்குள் இருக்கும். இனம் புரியாத சந்தோஷம் அது காரணத்தை தேட வேண்டாம். ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை உங்களுக்கு உணர்த்தும். இறை வழிபாட்டில் மனதை ஈடுபடும். நிறைவான இந்த நாளில் அந்த மீனாட்சி அம்மனுக்கு நன்றி சொல்லுங்கள்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது வீடு தேடி வரும். புதிய வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். எந்த வாய்ப்பாக இருந்தாலும் என்னால் முடியாது, எனக்குத் தெரியாது என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள். வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கான நல்லது நடக்கும். அந்த அம்பாள் உங்களுக்கு துணை நிற்பார்கள். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரிய தடை விலகும். நீண்ட நாட்களாக நடக்காத நல்ல காரியங்கள் உங்களுக்கு நடக்க துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி, நீங்கள் முன்னேறுவதற்கான வழி கிடைத்து விடும். அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சின்னதாக இன்று ஒரு நன்றியை சொல்லுங்கள்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். தேவையற்ற சிந்தனை வேலையை கெடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. எதையும் யோசிக்காமல், அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை நினைத்து இன்றைய நாளை துவங்குங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நல்லது நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நிதி நிலைமை உயரும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும். அந்த அம்பாளுக்கு நன்றி சொல்லி விடுங்கள்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்வது ஒரு பக்கம் இருக்க, உங்களுடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்றி விட நிறைய உதவிகளை செய்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அம்பாளுக்கு நன்றி சொல்லுங்கள். – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றம் இருக்கும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகலாம். எதற்கும் கவலைப்படாதீங்க. காலையிலேயே மீனாட்சி அம்மனையை வணங்கி விட்டு உங்களுடைய வேலையை துவங்குங்கள். இன்று நிச்சயம் உங்களுடைய ஏமாற்றத்தில் கூட ஒரு நன்மை நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடக்கும். நேரத்திற்கு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் அளவுக்கு உங்களுக்கு டைம் இருக்கப் போகிறது. சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபர் பேச்சை முழுமையாக நம்பாதீங்க. மீனாட்சி அம்மனை கும்பிட்டால் இன்று நல்லதே நடக்கும்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். நிதிநிலைமை மேலோங்கும். பணக்கஷ்டத்திலிருந்து வெளி வருவீர்கள். அந்த மீனாட்சியம்மனுக்கு நன்றி சொல்லுங்கள்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். பெரிய அளவில் முதலீடு செய்யும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். புது முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாதீர்கள். எதுவாக இருந்தாலும் அனுபவ சாலிகளுடைய பேச்சை ஒரு முறை கேட்கவும். முடிவு எடுப்பதில் பொறுமையும் நிதானமும் தேவை.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனது அலை பாயும். மனது ஒரு நிலையில் இருக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படும்‌ செய்யும் காரியங்கள் நல்லதா கெட்டதா என்ற குழப்பமும் இருந்து வரும். எதற்கும் கவலைப்பட வேண்டாம். மீனாட்சி அம்மனை மனதில் நிறுத்தி இன்றைக்கு உண்டான வேலையை துவங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இன்று அவ்வப்போது சின்ன சின்ன மறதி ஏற்படும். வேலையில் சின்ன சின்ன கவனக்குறைவு, வியாபாரத்தில் கொஞ்சம் அலட்சியம் இருக்கும். எல்லா வேலையையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு செயல்படுவீர்கள். அம்மா மீனாட்சி தாயை என்னை காப்பாற்று என்று மீனாட்சியின் பாதங்களை சரணடைந்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் வெற்றி கிடைக்கும்.இன்று மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். அனைவரும் ஒரு முறை அந்த மீனாட்சி அம்மனினை மனதில் நினைத்து வணங்க, உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த நாளை மீனாட்சி அம்மனை நினைத்து துவங்குங்கள். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top