இன்றைய ராசிபலன் – 09 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். பெருசாக சொல்லும் அளவுக்கு பிரச்சனைகள் எதுவும் வராது. அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் சரியாக முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய அடுத்த கட்ட படிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையை, உங்கள் வியாபாரத்தை, சரியாக செய்ய விடாமல் தடுத்த எதிரிகள் எல்லாம் உங்களை விட்டு தானாக விலகுவார்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து செல்லவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பொருள் சேர்க்கையும் இருக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவாக காணப்படும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனத்தோடு இருங்கள். நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களை நம்பி எந்த ரகசியத்தை சொல்ல வேண்டாம். நல்லவர்களாக இருப்பது தவறு கிடையாது. ஆனால் ஏமாளியாக இருக்காதீர்கள் ஜாக்கிரதை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சாந்தமான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உங்களுக்கு பிரச்சனை கொடுக்கக்கூடிய நபர் தானாகவே உங்களை விட்டு விலகி செல்வார்கள். கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு இருக்கிறது. வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை இன்று வாங்கலாம். லாபகரமான நாளாகவும் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளை சமாளிக்க முடியாது. வியாபாரத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். பக்கத்து கடைக்காரர்கள் சண்டைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொறுமையாக முடிவு எடுக்க வேண்டும் அவசரப்படக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப லேசாக இருக்கும். ஏதோ பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தது போல ரிலாக்ஸாக இருப்பீர்கள். சில பேருக்கு மனசு ஆன்மீகத்தை தேடும். இறையருள் முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அனுசரித்து செல்லுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை தூசி போல தட்டி தூக்கி விடுவீர்கள். உங்களைப் பார்த்து காலரை தூக்கிவிட்டு எதிரிகள் எல்லாம் இன்று பணிவோடு செல்வார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய செல்வாக்கு உயரும். கவலைப்படாதீங்க, உங்களுக்கு தொல்லை கொடுத்தவங்களை எல்லாம் இன்று ஒரு கை பார்க்கக்கூடிய நேரம் வந்துவிட்டது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மனசு வருத்தம் படியான சம்பவங்கள் நடந்தால் ரொம்பவும் உடைந்து போகக்கூடாது. எதுவாக இருந்தாலும் எதிர்த்து ஒரு கை பார்க்க வேண்டும். குட்ட குட்ட குனிந்து கொண்டே சென்றால் அது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பார்த்துக்கோங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தொழில் செய்யும் இடத்தில் எல்லாம் உங்களுடைய ஆர்வத்தை பார்த்து அடுத்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு உழைப்பீர்கள். நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நிறைய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு என்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வரலாம். சின்ன சின்ன கஷ்டங்கள் வரலாம். அதையே நினைத்து மனசை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. தோல்விகளை கஷ்டங்களை கடக்க முயற்சி செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் இருக்கும் கோபத்தை கொண்டு வந்து குடும்பத்தில் காட்டக் கூடாது. வீட்டில் இருப்பவர்களுக்கும் என்ன தேவை என்பதை புரிந்து உணர்ந்து செயல்பட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும். மனைவிக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் இருக்காது. குலதெய்வத்தை தரிசனம் செய்யக்கூடிய பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

– Advertisement –

Qries
Scroll to Top