– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் பெருசாக எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது. சொந்த பந்தங்கள், வாழ்க்கை துணை என்று யாரிடமிருந்தும் எதுவும் எதிர்பார்க்கக் கூடாது. ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்க்கும் போது தான் ஏமாற்றம் பெரிய துக்கத்தை தரும். எதிர்பார்ப்பு இல்லாமல் இருங்கள் இன்று பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பெருமாள் வழிபாட்டை மன நிறைவோடு செய்வீர்கள். உங்களுக்கு தேவையான வரங்களை அந்த இறைவன் கொடுத்து விடுவான். வேலை தொழில் எல்லாம் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் தெளிவடையக்கூடிய நாளாக இருக்கும். அந்த பகவான் ஏதோ ஒரு மனிதர் ரூபத்தில் வந்து உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கப் போகின்றான். நீண்ட நாள் குறைகள் நிறையாக மாறும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் லாபமாக மாறும். வேலையில் இருந்து வந்த கெட்ட பெயர் விலகும். நிம்மதி பிறக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக சரி செய்து விடுவீர்கள். அந்த பெருமாள் ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு. நிதி நிலைமை சீராகும். பொங்கல் கொண்டாட தேவையான பணம் கையை வந்து சேரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். நினைத்த வேலைகளை நினைத்த நேரத்தில் முடிக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். உடல் சோர்வு உண்டாகும். வேலையிலும் தொழிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். தேவையற்ற நண்பர்கள் உறவுகளிடம் இருந்து விலகி இருங்கள். அதிகம் பேசாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு இருக்கும். மனதிற்கு பிடித்த நபரிடம் பரிசு கிடைக்கும். பாராட்டும் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சில பேர் ஆன்மீக வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பெருமாள் வழிபாடு உங்களுக்கு மனநிறைவை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் வந்த வண்ணம் இருக்கும். ஊருக்கு எப்படி செல்வது, வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி புத்தாடை எடுப்பது, என்று சஞ்சலத்தோடு இருந்தவர்களுக்கு எல்லாம் இன்று ஒரு தீர்வு கிடைத்துவிடும். கவலைப்படாதீங்க செலவுக்கு அடுத்தவர்களிடம் கடன் தான் கேட்டிருப்பீர்கள். அது கூட சிலருக்கு கிடைத்திருக்காது. அந்த பணம் தானாக உங்கள் கையை வந்து சேரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். சொந்த ஊர் செல்ல டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு ஊருக்கு செல்ல நல்ல வழியை அந்த பெருமாள் காட்டிக் கொடுப்பான். வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க துவங்கி விடுவீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு ஷாப்பிங் செய்ய உகந்த நாள். சுப செலவுகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கும். வேலைகளை எல்லாம் சரிவர முடித்துவிட்டு, உங்களுக்கான ஓய்வை எடுத்துக் கொண்டு, இந்த நாளை நிறைவாக நகர்த்திச் செல்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொன்ன நேரத்திற்கு சொன்ன வேலையை முடித்துக் கொடுக்கக்கூடிய திறமையும், உங்களிடம் வெளிப்படும். வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும். பெண்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் உங்கள் சந்தோஷத்தை கெடுத்து விடும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை எதிர்த்து பேசாதீர்கள். நிதானத்தோடு நடந்து கொண்டால், நல்லதே நடக்கும். குறிப்பாக மனைவியிடம் குழந்தையிடம் அலுவலக பிரச்சனையை கொண்டு வந்து கொட்டாதீங்க. செருப்பை கழட்டும்போது, பிரச்சனைகளையும் கழட்டிவிட்டு வீட்டிற்குள் வருவது நலம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது கைக்கூடி வரும். நிம்மதி கிடைக்கும். எப்படிடா பொங்கலை கொண்டாடுவது, என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நல்ல வழியை காட்டிக் கொடுப்பான். உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். மனைவியின் ஆதரவால் மன நிம்மதி கிடைக்கும். நீங்கள் பெரிய பாக்கியசாலியாக இன்று வலம் வருவீர்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam