இன்றைய ராசிபலன் – 10 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 10 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முக்கியமான விஷயத்தில் மறதி ஏற்படும். எப்படி தான் இதை மறந்தோம் என்றே தெரியாது. ஆனால் கட்டாயம் செய்ய வேண்டிய வேலையை, செய்வதற்கு மறக்க வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருங்கள். இப்படி உங்களுடைய மறதியின் மூலம் சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமான விஷயம் என்றால் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து எழுதி வையுங்கள். மொபைல் போனில் அலாரம் வையுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உங்களுடைய நாள் கடந்து செல்லும். வேலையிலும் நிம்மதியாக இருப்பீர்கள். தொழிலிலும் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற ஆசைகள் செலவை அதிகரிக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், கையில் இருக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். யாரிடமாவது ஏமாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. டிஸ்கவுண்டில், மலிவு விலையில் ஏதாவது பொருள் வாங்குவதாக இருந்தால் இன்றைய நாளை தவிர்த்து விடுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எவ்வளவுதான் அலைச்சல் இருந்தாலும் எவ்வளவுதான் டென்ஷன் இருந்தாலும் உங்களுடைய வேலையை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளிடமா பாராட்டு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எதிர்பாராத முன்னேற்றமும் கிடைக்கும் சந்தோஷம் இரட்டிப்பாகும் வருமானம் பெருகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. இதனால் உங்களுக்குத்தான் இழப்பு ஏற்படும். பொறுமையாக இருந்தால் இன்றைய நாளை பிரச்சனைகள் இல்லாமல் கடந்து செல்வீர்கள். முன் கோபப்பட்டால் நஷ்டம் உங்களுக்கே.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுசாக தொழில் தொடங்கலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடங்கல்கள் வரும். எடுத்த காரியத்தை சட்டென முடிக்க முடியாது. இழுபறியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வரும். பிரச்சனைகள் வந்து பசை போல ஒட்டிக் கொள்ளும். வீண் செலவும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சிக்கல்கள் வரும். வாக்குவாதம் செய்யாதீங்க. யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். தேவையற்ற பகைவரும். இதையெல்லாம் சமாளிப்பதற்காகவே நீங்கள் நிறைய சாப்பிட வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தோடு திடமாக இருந்தால் தான் இன்றைக்கான நாள் நன்றாக செல்லும். நிறைய தண்ணீர் குடிங்க. சண்டை போடுவதற்கு ரெடியா இருங்க. பயப்படாதீங்க. இந்த நாள் இறுதியில் பிரச்சனைகள் சுமுகமாக முடிந்து விடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வரவு இரட்டிப்பாகும். சேமிப்பு அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உங்களுடைய கடன் தொல்லையில் இருந்தும் வெளிவருவீர்கள். மனசு சந்தோஷமாக இருக்கும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷமாக இந்த நாளை கடந்து செல்வீர்கள். கலைஞர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு இந்த நாள் சந்தோஷத்தை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முடிவு கட்டுவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் தொழிலிலும் சின்ன சின்ன டென்ஷன்கள் வந்து போகத்தான் செய்யும். அதை சமாளிப்பதற்கு உண்டான தெம்பும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். அதனால் பிரச்சனை இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் முதலீடு செய்யலாம். வந்த வருமானத்தை சேமிப்பில் வையுங்கள். மனைவியின் சொல்பேச்சு கேட்டு நடந்தால் பிரச்சனை இல்லை. தேவையில்லாமல் குடும்ப பிரச்சினை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. மாமியார் வழி உறவுகளோடு கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதை சமாளித்து விடுவீர்கள். டென்ஷன் குறையும். நிதி நிலைமை சீராக இருக்கும். மனைவிக்கு தேவையான பொருளை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top