– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் பல மடங்கு லாபத்தை சேர்க்கும். குடும்பத்தில் மட்டும் கொஞ்சம் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனைவியை அனுசரித்து செல்லுங்கள். உறவுகளோடு கடினமான வார்த்தையை பேசாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கையில் இருக்கும் சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். புதுசாக எந்த பொருளும் வாங்காதீங்க. யாரிடமாவது பணத்தை ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் நிறைய வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்திலும் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. கூடுமானவரை ரொம்பவும் முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுங்கள். அனுபவ சாலிகள், பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். அடம்பிடித்து எந்த ஒரு காரியத்தையும் சாதிக்காதிங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் தொடர்ந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத நல்லது தானாக நடக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ப்ரமோஷனுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வருமானம் இரட்டிப்பாகும். தொழிலில் இருந்து வந்த தடைகள் எல்லாம் விலகும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உண்டான கடன் கிடைக்கும். வங்கி கடன் முயற்சி செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்டும். சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். சுபசலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கக்கூடிய நாள் இது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் பல மடங்கு நன்மை நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் பதட்டம் இருக்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை விடுவது என்று சில பேருக்கு சிக்கல்கள் குழப்பங்கள் வரும். கூடுமானவரை புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினாலே போதும். பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக இருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் விலகக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல சமூகமாக செல்லும். பெருசாக சிக்கல்கள் இருக்காது. முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்கணும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் எதிரியாக இருந்தவர்கள் கூட, நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். பாட்னர்கள் உங்களுக்கு சாதகமாக வேலை செய்வார்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிடாதீங்க. நிறைய தண்ணீர் குடிங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதுக்கு நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியே கொடுக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். யாருக்கும் கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம். குறிப்பாக எதிர்பாலின நட்பு சிக்கல்களை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு தெளிவாக இருக்கும். எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கலாம் என்று, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். இதனால் பெரிய சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக மனதை குழப்பிக் கொண்டிருந்த பயம் விலகும். இறைவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
– Advertisement –