இன்றைய ராசிபலன் – 12 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி நிரம்ப நிரம்ப இருக்கும். எந்த வேலையை செய்தாலும் ஆர்வத்தோடு செய்வீர்கள். எல்லாம் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். மனைவியோடு சண்டை போட வேண்டாம். வெளிவேலையோடு சேர்த்து, வீட்டு வேலையையும் கொஞ்சம் கவனியுங்கள். குடும்ப உறவுகளோடு சந்தோஷமாக இருப்பதும் உங்கள் கடமை தான்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பேராசைப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை உங்களால் பார்க்கவே முடியாது. அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே ஆர்வம் போகும். இதனாலேயே பாதி பிரச்சனை வந்துடும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால், இன்றைய நாளை சமாளிக்கலாம். பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்கவும். பேராசை பெருநஷ்டம் என்பதை இன்று மனதில் ஆழ பதிய வைக்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. எதிலும் அவசரப்படக்கூடாது. மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. சொன்ன நேரத்தில் வாக்கை காப்பாற்ற முடியாமல் போக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தலைகுனிவு உண்டாக வாய்ப்புகள் உள்ளது. அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் தேவையற்ற பயம் எழக்கூடிய நாளாக இருக்கும். மனது நிம்மதியாக இருக்காது. இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் கடவுளின் மீது பாரத்தை போட்டு, உங்களுடைய வேலையை தொடங்கினால் நிச்சயம் நல்லது நடக்கும். தேவையற்ற மன குழப்பம் நீங்க, பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வாங்க.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களைத் தொடர்ந்து வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுப காரியம் பேச்சுகள் தொடங்கும். சுப செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை அதிகமாக வெயில் சமயத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது, குறிப்பாக வயதானவர்கள் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக் கூடிய விஷயத்தில் முன்னிலையில் நிற்பீர்கள். ரத்ததானம் செய்வது, அன்னதானம் செய்வது போன்ற பொதுநல காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மனது நிம்மதி அடையும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் சுமூகமாகவே செல்லும். உயரதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள் வேலையில் சிக்கல்கள் இல்லை.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெருசாக எந்த சிக்கலும் இருக்காது. பெருசாக வேலையும் இருக்காது. நல்ல ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. யார் எப்படி போனால் என்ன நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் எனக்கு தேவை என்று நீங்க பாட்டுக்கு ரெஸ்ட் எடுக்க தொடங்கிடுவீங்க. இதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை. இருந்தாலும் உங்களை பார்த்து சில பேர் பொறாமை படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டு பெண்களுக்கு இரட்டிப்பு வேலை இருக்கும். சில பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த பந்தங்கள் வீட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தத்தில் இன்று உங்களுக்கு ஓய்வு இல்லை. இரவு படுத்தவுடன் தூக்கம் சொர்கம் போல கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். நீங்கள் செய்த நல்ல வேலைக்கு கூட வேறு யாரோ ஒருவர் பெயரை தட்டி வாங்கி செல்வார்கள். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் வரும். கோபம் வரும். எதுவாக இருந்தாலும் பொறுமையாக கையாளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். திறமையாக செயல்படுவீர்கள். சிக்கலான பிரச்சனைகளை கூட சமூகமாக ஒரு தீர்வை கொடுப்பீர்கள். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கேட்க இதுதான் சரியான நேரம். சந்தர்ப்ப சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. பெண் குழந்தைகளின் மூலம் மனசு சந்தோஷம் அடையும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான யோகம் இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். மனைவி குழந்தைகளோடு இன்று மாலை நேரத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை. கூடுமானவரை ஹெட் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

– Advertisement –

Qries
Scroll to Top