இன்றைய ராசிபலன் – 14 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் கூடுதல் பொறுப்போடு இருப்பீர்கள். உங்களை நம்பி கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து பாராட்டும் பெறுவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலையில் அக்கறை காட்டுவது போல குடும்பத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மனைவி சொல் பேச்சு கேளுங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். நீண்ட நாள் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க பிரச்சனையாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவுதான் வேலை இருந்தாலும் அதையெல்லாம் சுறுசுறுப்பாக முடித்துவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்பதற்கும் நேரம் கிடைக்கும். ரிலாக்ஸ் ஆன நாளாக இன்றைய நாள் நகர்ந்து செல்லும். குடும்பத்தில் மனைவி குழந்தைகள் என்று அவர்களோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். தொழிலில் சுமூகமான போக்கு நிலவும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். சிக்கல்களை எல்லாம் தாண்டி தொழிலை எப்படி முன்னேற்றுவது என்ற புத்தம் புது யோசனைகள் எல்லாம் தோன்றும். எதிர்பாராத பண வரவு மன நிறைவை கொடுக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களை பின்னுக்கு தள்ளியவர்களை, முந்தி அடித்துக் கொண்டு முன்னே செல்லக்கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வி தடை விளக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். வேலையில் கவனம் இருக்காது. வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க தெம்பு இருக்காது. கொஞ்சம் சோர்வாகத்தான் காணப்படுவீர்கள். இருந்தாலும் அன்றாட வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை எல்லாம் முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடுங்கள். அதிகமான வெயிலில் வெளியே செல்லாதீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் இருக்கட்டும். புதிய முதலீடு செய்யும் போது அலட்சியம் வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. திருப்தியோடு உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். அதற்கு உண்டான பாராட்டுகளும் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஆனால் அதை எல்லாம் தாண்டி லாபத்தை எடுப்பதில் குறியாக இருப்பீர்கள். அதில் திறமையாகவும் செயல்படுவீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புத்தம் புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு தேவையான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள் வங்கி கடன் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் சொல்பேச்சு கேட்டு நடந்தால் இன்னும் நிறைய நல்லது நடக்கும். அடப்பிடித்து எந்த விஷயத்தையும் செய்யாதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். பேராசை பெருநஷ்டம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை நம்பாதீங்க. தெரியாத விஷயத்தில் கொண்டு போய் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். முன்பின் தெரியாதவர்களை நம்பாதீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கஷ்டம் இருக்கும். தேவையில்லாத சிக்கல்கள் வரும். வியாபாரத்தில் சின்ன சின்ன இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் துவண்டு போகக்கூடாது. வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் திறமையாக செயல்பட்டு நிதானமாக சிந்தித்தால் பிரச்சனையிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு இருக்கு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலையில் அக்கறை காட்டுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். இதுநாள் வரை வேலையில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். இன்றைய நாள் நிம்மதியான போக்கிய நிலவும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். அடுத்தவர்களுடைய பேச்சுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள். சுயநலமாக சிந்திக்காதீர்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top