– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சுறுசுறுப்போடு நடக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த தேவையற்ற பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டத்திலேயே சில வேலைகளை சரியாக செய்து முடிக்க மாட்டீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையாக சிந்தித்து செயல்படுவோம். அடுத்தவர்கள் பேச்சை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்களுடைய வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும். இறை வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழுங்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சில பேருக்கு காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் உண்டாகும். வேலை தொழில் இவற்றில் எல்லாம் உங்களுடைய சாதனை முன்னிருக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை இனிமையாக இருக்கும். நினைத்து பார்க்க முடியாத நல்லது நடக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். பொருளாதார நிலைமை சீராகும். வாங்கிய கடனை திருப்பி அடைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். பரிசுத்தொகை பரிசு பொருட்கள் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்காலத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய படிப்பில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வேலையில் டென்ஷன் ஆக கூடாது. மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சனைகள் வரும். சேமிப்பு கரையும். செலவு அதிகமாகும். ஜாமீன் கையெழுத்து யாரை நம்பியும் போடக்கூடாது. வியாபாரத்தில் சின்ன சின்ன சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொறுத்தவரை இன்றைய நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லை. வேலையில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். புது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். சில பேர் இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள் மனநிறைவு இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை விரைவாக கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். சில பேருக்கு பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் தெளிவடையும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக விலகும். எதிரி தொல்லை இருக்காது. நல்லது கெட்டதை நன்றாக அலசி ஆராய கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கும். பேச்சாற்றல் வெளிப்படும். யாரை நம்பி மோசம் போனீர்களோ, அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதி இருக்கும். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று முட்டி மோதி ஜெயிப்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வாக்குவாதம் சண்டையின் மூலம் சில பேருக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக வேலை தேடலாம். இடமாற்றத்தை பற்றி பேசலாம். எல்லாம் நன்மையை கொடுக்கும். பெண் பிள்ளைகளால் மனது மகிழ்ச்சி அடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் ஏற்படும். மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாது. டார்கெட்டை முடிக்காததால் சில பல பிரச்சனைகள் வரலாம். வேலை தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். சமாளித்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam