இன்றைய ராசிபலன் – 17 மே 2024

இன்றைய ராசிபலன் – 17 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக அயராது உழைத்தவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். உழைப்புக்கான பலனும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதியை பெறுவீர்கள். உங்களைப் பின்தொடர்ந்த தொல்லைகள் எல்லாம் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்ய தேவையான பணம் கையை வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கக்கூடிய நாள் இது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மனக்குழப்பத்தோடு இருப்பீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை வந்து தொல்லை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இருக்காது. மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்காது. இதனால் சோர்ந்து விடக்கூடாது. உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள். பொறுமையாக பேசுங்கள் நல்லது நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக எல்லா வேலையும் செய்வீங்க. வேலை செய்யும் இடத்தில் புகழ் உண்டாகும். உங்களுடைய திறமை வெளிப்படும். பதிவு உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். பாட்னரோடு சேர்ந்து அதை எல்லாம் சரி செய்யக்கூடிய வேலையை கவனியுங்கள். பிரச்சனைகள் வந்தால் ஒட்டுமொத்த பழியையும் ஒருவர் மீது சுமத்த வேண்டாம். தீர விசாரிக்காமல் முடிவை எடுக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். நல்லது நடக்கக்கூடிய நாள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். புது ஆர்டர்களை எடுக்கும் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நாலு பேருக்கு மத்தியில் நின்றால் உங்களுடைய மரியாதை உயரும். அடுத்தவர்கள் பாராட்டத்தக்க வகையில் உங்களுடைய குணாதிசயம் வெளிப்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடப்பதற்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். நண்பர்கள் ரூபமாகவோ, அல்லது சொந்த பந்தங்கள் மூலமாகவோ, ஏதாவது குழப்பம் வரும். பிரச்சனையை நினைத்து துவண்டு போகக்கூடாது. வரக்கூடிய பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. இன்று நிதானமாக சிந்தித்தால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்பதை மறக்காதீங்க.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுமுகமான நாளாக இருக்கும். எந்த பிரச்சனையும் பெருசாக வராது. அந்தந்த வேலை, அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். மனைவியை சமாளிப்பது சில சிக்கல்கள் கணவன்மார்களுக்கு வரலாம். குடும்ப விஷயத்தில் பொய் சொல்லாதீங்க. எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லி நிலைமையை ஒற்றுக் கொள்வதுதான் நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு ஏதோ ஒரு மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் வேலையில் கவனம் இருக்காது. சின்ன சின்னதா அப்பப்போ மேனேஜர் கிட்ட திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இதனால் டென்ஷன் அதிகரிக்கும். பிரச்சினை எதற்கு. மனதை ஒருநிலைப்படுத்தி பிறகு வேலையை செய்ய தொடங்குங்கள். நல்லதே நடக்கும். கெட்டதை எல்லாம் குப்பைத் தொட்டியில் தூக்கி போடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் முயற்சி இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக விட்டுவிட மாட்டீர்கள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று முட்டி மோதி உங்களுடைய திறமையை காட்டுவீர்கள். இதனாலேயே உங்களுக்கு இன்று வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சுற்றி இருப்பவர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதனால் உங்களுடைய திறமை வெளிப்படும். அறிவாற்றல் அதிகரிக்கும். வேலையில் ப்ரமோஷனுக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம். ஆனால் வந்த துன்பங்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். மனசு குடும்பத்தை நினைத்து நிறைய கவலைப்படும். எதிர் காலத்தில் என்ன செய்வது என்ற குழப்பம் நிறையவே இருக்கும். தேவையற்ற பயங்களை விட்டுவிட்டு அன்றாட வேளையில் கவனம் செலுத்தினாலே பிரச்சனை இல்லை. மனதை ஒருநிலைப்படுத்தி இஷ்ட தெய்வத்தின் வழிபாடு செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை குறைக்க வேண்டும். தேவையற்ற பகை உணர்ச்சியை குறைத்துக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். நிதானத்தை இழந்தவர்களுக்கு, இன்று நிம்மதியும் கூட சேர்ந்து காணாமல் போய்விடும். ஜாக்கிரதையாக இருங்கள். வாழ்க்கை துணை பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. மூன்றாவது நபரை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

– Advertisement –

Qries
Scroll to Top