இன்றைய ராசிபலன் – 18 மே 2024

இன்றைய ராசிபலன் – 18 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டைகள் விலகும். வேலை என்று வரும்போது தான் சிக்கலில் சிக்குவீர்கள். கவனக்குறைவால் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேனேஜர் கிட்ட பார்த்து பேசுங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாலை கோயிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்யும் போதும் கவனமாக இருங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். உங்களை முட்டாள் என்று நினைத்தவர்கள் கூட, உங்கள் புத்திசாலித்தனத்தை பற்றி தெரிந்து கொள்வார்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணங்கள் எல்லாம் மேலோங்கி இருக்கும். எல்லா விஷயத்தையும் சரிவர செய்து முடிப்பீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பு கொஞ்சம் அதிகரிக்கும். தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு மிக மிக பயனுள்ள நாளாகவும் அதேசமயம் மிக மிக முக்கியமான நாளாகவும் இருக்கப்போகின்றது. பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கிறது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் தேவையற்ற பயம் இருக்கும். குழப்பமான நேரத்தில் எந்த பிரச்சனைக்கும் முடிவு எடுக்காதீங்க. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். எதிரிகளால் சின்ன சின்ன தொல்லைகள் வரும் சமாளிக்க தயாராக இருந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரை நம்பியும் பணம் கொடுக்கக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் புதிய முதலீட்டை செய்யாதீர்கள். வேலையில் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம். அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. குலதெய்வ வழிபாடு செய்வது இன்று குறைகளை தீர்க்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேரு மத்தியில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில் தான் உங்களுக்கு சில பல பிரச்சனைகள் வரும். நிறைய எதிரி தொல்லை கண் திருஷ்டியில் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பிரச்சனைகள் வந்து சிரமத்தை கொடுக்கும். தேவையற்ற குழப்பங்கள் நிலவும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். வேலை செய்யும் இடத்தில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காதீங்க. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்கவே கூடாது. தொழிலில் அதிக கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை 10 நிமிடத்தில் செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் நீண்ட தூர பயணத்தை தள்ளி போடவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சாந்தமான நாளாக இருக்கும். பிரச்சனைகளே வந்து இடி போல தலைமேல் விழுந்தாலும் அசர மாட்டீங்க. உங்கள் நிலையிலிருந்து மாற மாட்டீர்கள். அதற்காக அவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று சொல்லவில்லை. மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று விவரமாக வேலை செய்வீர்கள். உங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தவர்கள் முன்பு, வாழ்ந்து காட்டுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் இன்று அதிகமாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கம் இருக்கும். வாகனத்தில் செல்லும் போது மட்டும் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாடு திரும்ப வாய்ப்புகள் வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால், குடும்பத்தில் பிரச்சனை இல்லை. வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்லது நடக்கும். மேனேஜரின் தொல்லை விலகும். உங்களுடைய டார்கெட்டை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். இன்செட்டிவ் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top