இன்றைய ராசிபலன் – 21 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சில பேருக்கு செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். அவசர தேவை என்பதால் அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். செலவுகளை சமாளிக்க பாருங்கள். நிதி நிலைமை தவிர மற்றபடி வேலை, தொழில் எல்லாம் உங்களுக்கு சாதகமான நிலையில் செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். புத்தம் புது ஐடியாக்களை எல்லாம் உருவாக்கி ஓடாத வியாபாரத்தை கூட ஓட வைத்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்‌. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் வசூல் ஆகும். இதனால் மன நிம்மதி அடைவீர்கள். சில பேருக்கு மாமியார் வழி உறவின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவியிடம் சண்டை போடாதீங்க. வாக்குவாதம் செய்யாதீங்க. குடும்ப விஷயத்தில் அனுசரித்துச் சென்றால்தான் இன்று மன நிம்மதி பெறுவீர்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன முன்னேற்ற தடை இருக்கும். நீங்கள் பிளான் பண்ணபடி எந்த வேலையும் நடக்காது. இதனால் கொஞ்சம் மூட் அவுட் ஆகும் கவலை படாதீங்க. எல்லா நேரத்திலும் எல்லா விஷயத்தையும் சக்சஸ் செய்ய முடியாது. சின்ன சின்ன ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்போது தான் வாழ்க்கையினுடைய இயல்பை புரிந்து கொள்ள முடியும். வாழ்க்கை துணையிடும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொறுமை காக்கவும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் இருக்கட்டும். உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன பொருள் இழப்புக்கு வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களுடைய வேலைகளை சொன்ன நேரத்திற்கு சரியாக முடித்துக் கொடுத்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் இடர்பாடுகள் வரும். சொன்ன நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்ய முடியாது. சொன்ன நேரத்தில் கடனை திருப்பித் தர முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்குவீர்கள். வியாபாரம் என்றால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை திறமையாக சமாளிக்க யோசிங்க பிரச்சனை சுலபமாக முடிந்து விடும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்திலும் நன்மை நடக்கும். மேலதிகாரிகளின் சப்போர்ட் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று செலவுகள் குறைய கூடிய நாளாக இருக்கும். சேமிப்புகள் உயரக்கூடிய நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான நிறைய நல்ல திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். சின்னதாக பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரிய வியாபாரம் செய்பவர்கள் வரை நல்ல படியாக கல்லா கட்டுவீங்க. கமிஷன் தொழிலும் நல்லபடியாக நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பதவி தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இன்றைய நாளை தொடங்குவீர்கள். நாலு பேருடைய பாராட்டை பெறும்போது இன்னும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை வரும் அல்லவா. அதுபோல வாழ்க்கை தான் என்று உங்களுக்கு இருக்கப் போகின்றது. சந்தோஷம் இரட்டிப்பாகும். குலதெய்வத்துக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்பு மட்டுமே உயர்வை கொடுக்கும். சாதாரணமாக ஒரு முறை செய்யக்கூடிய வேலையை கூட இரண்டு மூன்று, முறை செய்யக்கூடிய வாய்ப்புகள் வரும். அதனால் புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன திட்டு வாங்கலாம். மேல் அதிகாரிகள் உங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் கடினமான வார்த்தைகளால் கூட திட்டலாம். கொஞ்சம் பொறுமை காக்கவும் உங்களுக்கான நல்ல நேரம் வரும்வரை காத்திருக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் உதவி நன்மை செய்யும். நண்பர்கள் உறவுகள் எல்லாம் உங்களுக்கு சப்போர்ட் செய்வாங்க. திடீரென்று அவசர தேவைக்கு பொருள் உதவி பண உதவி வேண்டும் அல்லது வேறு ஏதாவது உதவி வேண்டும் என்றாலும் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சக மனிதர்களின் மனதை புரிந்து கொள்ளக்கூடிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை தொழிலில் எல்லாம் கூடுதல் கவனம் இருக்கட்டும். எதிலும் அலட்சியம் வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். எதுவாக இருந்தாலும் பொறுமையாக இருக்கவும். வார்த்தைகளில் கவனம் தேவை. நீண்ட தூர பயணம் நன்மையை தரும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும் கெட்ட பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

– Advertisement –

Qries
Scroll to Top