இன்றைய ராசிபலன் – 23 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக திகழப்போகிறது. நல்ல ஆரோக்கியமான சூழல் உண்டாகும். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதால் உங்களுடைய பணியில் சிறப்பாக நீங்கள் செயல்பட்டு வெற்றிகளை பெறுவீர்கள். போதுமான அளவு பணவரவு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக திகழப் போகிறது. பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டை பெரும் சூழ்நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாராக தான் இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதால் நல்ல பலன்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். காலதாமதத்தால் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வரவை விட செலவு அதிகமாகவே இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிரமமான நாளாக தான் இருக்கும். வேலை சுமை அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. பண வரவை விட செலவு அதிகமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக திகழப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிதாக முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய நாளாக திகழப் போகிறது. உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் உங்களை தேடிவரும். இருப்பினும் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வீட்டு பெரியவர்களிடமும் துணையுடனும் பார்த்து பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று கவனமாக செயலாற்ற வேண்டிய நாளாக திகழப் போகிறது. வேலையில் அதிக அளவு கவனம் செலுத்துங்கள். இல்லையேல் பிரச்சனைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மையை தரும். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. முடிந்த அளவிற்கு பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியாக இருக்க வேண்டிய நாளாக திகழப்போகிறது. யாரிடமும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாக பக்குவமாக நடந்து கொண்டால் நன்மைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் அதிகளவு பணி சுமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் அவை அனைத்தும் செலவாகிவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நேர்மறையாக யோசித்து செயலாற்ற வேண்டிய நாளாக திகழப் போகிறது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக திகழப் போகிறது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய நாளாக திகழப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களால் பிரச்சினைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை சுமை இருக்கும். அதை கவனத்துடன் செய்தால்தான் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். சிறு கவனக்குறைவு கூட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்துடன் செயலாற்று வேண்டிய நாளாக திகழப் போகிறது. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் கூடுதல் கவனம் தேவை. ஏனோதானோ என்று எதையும் செய்யக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு ஏற்படுவது சிரமமாக இருக்கும்.

– Advertisement –

Qries
Scroll to Top