– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் என்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் அவசரப்படக்கூடாது. மூன்றாவது நபரின் பிரச்சினையில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளி போடவும். விடுமுறை நாள் என்பதால் வெளியிடங்களுக்கு அனாவசியமாகச் சென்று அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். தேவையற்ற விஷயங்களை நினைத்து நேரத்தை அனாவசியமாக செலவு செய்வீர்கள். இதனால் தலைபாரம் சின்ன சின்ன டென்ஷன் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு மேற்கொள்ளவும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய தொழில் செய்பவர்கள் வரை இன்று மனதிருப்தியோடு பணத்தை எண்ணி எடுத்து வைப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். உங்களுடைய வேலைகளை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் உங்களுடைய விடா முயற்சி இன்றைக்கு உண்டான வேலையை சரியாக செய்து முடித்துக் கொடுக்கும். கவலைப்படாதீர்கள், இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. நல்லது நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. முதலீடு செய்வதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை மூன்றாவது நபரை நம்பி ஒப்படைக்க கூடாது. முன்பின் தெரியாத நபர் சொல் பேச்சைக் கேட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். பெருசாக பிரச்சனைகள் இல்லை என்றாலும் சின்ன சின்ன மன கசப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்தவர்களோடு சண்டை வர வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்கள் மனது நோகும்படி பேசாதீர்கள். பொறுமையாக இருங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதுசாக சாதனை படைத்த நல்ல பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு இன்று மாலை கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக நடந்து கொள்வீர்கள். பணிவாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய கோபம் எல்லாம் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போய்விடும். இன்றைய நாள் மன அமைதியோடு நிம்மதியாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். காரணம் முன் கோபத்தை குறைத்துக் கொண்டதுதான். கோபம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ளக்கூடிய நாள் இது
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மனைவிக்கு தேவையான ஆடம்பர ஆடை ஆபரண பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சந்தோஷம் கிடைக்கும். வேலை தொழில் எல்லாம் நிம்மதியாக செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதியின் மூலம் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் படிக்கும் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் உங்களுக்கு கொடுத்த பொறுப்பை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. எந்த முக்கியமான விஷயமாக இருந்தாலும் சரி, அதை ஒரு பேப்பரில் எழுதி வைத்து சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் இழப்புகள் பெருசாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவத்தில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் ஒத்துழைக்காது. விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் கிடைக்கும். மனைவியோடு இருந்து வந்த சண்டைகள் நீங்கும் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam