இன்றைய ராசிபலன் – 27 மே 2024

இன்றைய ராசிபலன் – 27 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் செல்வாக்கு அதிகரிக்கும் தினமாக திகழப்போகிறது. விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகள் செய்வதில் விருப்பம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் ஒப்பந்தம் சாதகமாக அமையும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய தினமாக திகழப்போகிறது. நினைத்த காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின் ஆலோசனையால் நல்ல மாற்றம் ஏற்படும். மூன்றாவது நபரின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். யாரிடமும் கோபப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தெளிவு ஏற்படும் தினமாக திகழப்போகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் சந்திப்பால் உற்சாகம் உண்டாகும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். புதிய அனுபவங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. முயற்சிகளில் இருந்து வந்த தடைகளை புரிந்து கொண்டு தெளிவான முடிவெடுத்து செயல்படுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நன்மைகள் நிறைந்த தினமாக திகழப்போகிறது. மனதில் இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத வரவுகள் ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளால் நன்மைகள் உண்டாகும். புதிய அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அலைச்சல் அதிகரிக்கும் தினமாக திகழப் போகிறது. குடும்பத்தில் இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களின் தனித்திறமை வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சுறுசுறுப்பாக செயலாற்ற வேண்டிய தினமாக திகழப்போகிறது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு உண்டாகும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பாராட்டு கிடைக்கும் தினமாக திகழப்போகிறது. எதை செய்வதாக இருந்தாலும் தனித்து செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைய ஆரம்பிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். வாகனம் மாற்றும் எண்ணம் மேலோங்கும். அலுவலகத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சாதகமான தினமாக திகழப்போகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையுடன் பேச வேண்டும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மதிப்பு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய தினமாக திகழப்போகிறது. மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகளால் மனவேதனை உண்டாகும். உணவு ரீதியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பிறருடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை சார்ந்த விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய தினமாக திகழப்போகிறது. செய்யும் செயலில் ஒருவித படபடப்பு ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையைத் தரும். அலுவலகம் மற்றும் தொழிலில் பெருமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் வெற்றி நிறைந்த தினமாக திகழப்போகிறது. உடன் இருப்பவர்களால் நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் லாபகரமான தினமாக திகழப்போகிறது. எதிர்பாராத சில உதவிகளால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். அரசு துறை சார்பாக எதிர்பார்த்து இருந்த செயல்கள் நடைபெறும். தொழிலில் நல்ல லாபம் அடைவீர்கள். தேவைக்கேற்ற பணவரவு ஏற்படும். எதிரிகள் பிரச்சினை நீங்கும்.

– Advertisement –

Qries
Scroll to Top