– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். ஆக்கபூர்வமாக நிறைய நல்ல வேலைகளை செய்வீர்கள். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகி சுமூகமாக செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் எல்லாம் சரியாகிவிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனத்தோடு இருங்கள். மூன்றாவது நபர்களை நம்பி உங்களுடைய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் முதலீட்டின் போது கவனம் செலுத்துங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். முன்பின் தெரியாத தொழிலை புதுசாக தொடங்குவது, முன்பின் தெரியாத நபர் யோசனையை, செயல்பாடாக மாற்றுவது போன்ற செயல்களில் இன்று ஈடுபட வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக தான் இருக்கும். வேலை பளு மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். முன்கூட்டியே உங்களுடைய வேலையை முடிக்க பாருங்கள். சோம்பேறித்தனத்தை தூரம் வைத்து விட்டால், இன்றைய நாள் உங்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஒற்றுமை இருக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இன்று இருக்கும். பொதுப் பணிகளில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க நினைக்காதீர்கள். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் உடன் வேலை செய்பவர்களை சமாளிப்பதில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். இருந்தாலும் பிரச்சனைகளை சுலபமாக சரி செய்யக்கூடிய திறமையை கடவுள் உங்களுக்கு கொடுத்திருப்பதால், பிரச்சனைகள் எல்லாம் லேசாக தான் தெரியும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். புதிய வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். கமிஷன் தொழில் நன்றாக சூடு பிடிக்கும். சின்ன சின்ன வியாபாரிகளுக்கும் நிறைய கல்லா கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன வேலையில் கூட கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே கொஞ்சம் கிளம்புங்கள். கடைசி நிமிடத்தில் அவதி அவதியாக எந்த ஒரு காரியத்தையும் செய்யாதீர்கள். அரசாங்க வேலையில் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். குறுக்குப் பாதையில் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் நேர் வழியில் செல்லுங்கள். கொஞ்சம் தாமதமானாலும் அந்த வேலையில் பிரச்சனை வராது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கப் போகின்றது. புதுசாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வும் கிடைக்கும். கட்டுமான தொழில் சிறப்பாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ரிலாக்ஸான நாளாக இருக்கப் போகின்றது. இடியே வந்து தலையில் விழுந்தால் கூட அசரமாட்டீங்க. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பார்ப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கலான பிரச்சனைகளை கூட ஒரு நிமிடத்தில் சொடக்கு போடும் நேரத்தில் முடித்துவிட்டு எதுவும் தெரியாதது போல் இருப்பீர்கள். அந்த அளவுக்கு திறமை வெளிப்படும் நாள் இது. இன்னைக்கு நீங்க ஸ்மார்ட் வொர்க் பண்ணுவீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். தாய் மாமன் வழி உறவால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருங்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சிக்கலான பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாள் இது. மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். யாராலும் சாதிக்க முடியாத சில விஷயங்களை இன்று நீங்கள் சாதித்து காட்டுவீர்கள். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். கவலைகள் நீங்கும். நிதிநிலைமை சீராகும்.
– Advertisement –