இன்றைய ராசிபலன் – 29 மே 2024

இன்றைய ராசிபலன் – 29 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. அதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அனுபவ சாலிகளிடம் கலந்தாலோசித்து பேசி ஒரு முடிவுக்கு வருவது நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன நிம்மதி பெறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தொழிலில் புதிய முதலீட்டின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கும் இன்று நல்ல செய்தி கிடைக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். இதனால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பெரிசாக பிரச்சனை இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தின் போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுமான தொழில் நல்ல முன்னேற்றத்தை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். எதையோ இழந்தது போலவே இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிக்கலான சூழ்நிலை வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய தெம்பை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கின்றான். அதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. மேல் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வரா கடன் வசூலாகும். சேமிப்பு அதிகரிக்கும். மனைவிக்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பரிசை கொடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளுக்கு தேவையான படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெற்றவர்கள் அக்கறை காண்பிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் துயரம் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அடுத்தவர்கள் உங்களுடைய மனதை புரிந்து கொள்ளாமல் பேசி விடுவார்கள். உங்களுடைய நல்ல மனது உங்களுக்கு தெரியும். ஆகவே அனாவசியமாக அடுத்தவர்களை நினைத்து இன்று கவலைப்பட்டு நேரத்தை செலவு செய்யாதீர்கள். உங்களுடைய வேலையில் அக்கறை காட்டுங்கள் நல்லதே நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைக்காத நல்லது எல்லாம் நடக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை தொடங்குவது சீட்டு கட்டுவது போன்ற நல்ல விஷயங்களை இன்று தொடங்கலாம்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் 10 ரூபாய் முதலீடு செய்தாலும் அதில் 100 ரூபாய் லாபத்தை எடுப்பீர்கள். அந்த அளவுக்கு உங்களுக்கு இன்று அதிர்ஷ்ட காற்று வீசும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட தூர பயணம் மன சந்தோஷத்தை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியங்கள் கைக்கூடி வரும். பிள்ளைகளுக்கு ஸ்கூல் அட்மிஷன் போடுவது புது வேலைக்கு போவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யலாம். பெரியவர்களின் ஆசிர்வாதமும், அந்த கடவுளின் ஆசிர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் வரும். இதனாலேயே நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும். நல்ல நண்பர்களும் கூட உங்களை விட்டு பிரிய வாய்ப்புகள் இருக்கிறது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, மாமியார் வழி உறவுகளோடு ஜாக்கிரதையாக பேசுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பகைவர்கள் கூட உங்களோடு வந்து நட்புறவு பழகுவார்கள். அந்த அளவுக்கு உங்களுடைய தகுதியும் தராதரமும் உயர்ந்திருக்கும். உங்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்று யாருமே நினைக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு இன்றைக்கான நாள் கை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். நடக்கவே நடக்காது என்று இருந்த நல்ல காரியங்கள் கூட இன்று நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உறவுகளோடு ஜாக்கிரதையாக பேசவும். முன் பின் தெரியாத நட்போடு பழகுவது பிரச்சனைகளை கொடுக்கும். ஜாக்கிரதையாக இருங்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top