இன்றைய ராசிபலன் – 31 மே 2024

இன்றைய ராசிபலன் – 31 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். எந்த ஒரு சலனமும் இல்லாமல் உங்களுடைய நாள் நகர்ந்து செல்லும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை புரிந்துகொண்டு தேடிப்போய் உதவி செய்வீர்கள். இரவு நிம்மதியான உறக்கத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் சுலபமாக கடந்து செல்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றியும் காண்பீர்கள். தொழில் சின்ன சின்ன தடைகள் விலகி முன்னேற்ற பாதையில் செல்லும். கூடுதல் லாபத்தை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பதட்டம் இல்லாத நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பிரமோஷனுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. எதிரிகளால் தொல்லை இருக்காது. கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் முதலீட்டின் போது கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாத நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் இருக்கும். முன்கோபம் அதிகமாக வரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வீர்கள். மேனேஜர், டீம் லீடரிடம் எதிர்த்து பேசும்போது தேவையில்லாத வாக்குவாதம் வரும். கவனமாக இருங்கள். இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு விடா முயற்சி இன்று விஸ்வரூப வெற்றியை தேடி தரும். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். இருந்தாலும் குடும்பத் தலைவி அனுசரித்து செல்வீர்கள். சிக்கல்களை சமாளிக்க கூடிய பக்குவம் உங்களிடத்தில் இருக்கும். பொறுத்துப்போனோர் பூமி ஆழ்வார்கள் என்பதை ஒருபோதும் மறக்காதிடாதீங்க. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். பற்றாக்குறை பட்ஜெட் கடன் வாங்க வைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எல்லா விஷயத்திலும் இன்று அனுசரித்து செல்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சின்ன சின்ன இடர்பாடுகள் வரும். இருந்தாலும் அதையெல்லாம் சரி செய்யக்கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும். கடவுளின் ஆசிர்வாதமும் வீட்டு பெரியவர்களின் ஆசிர்வாதமும் உங்களை ஊக்குவிக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். தொட்டதெல்லாம் வெற்றி அடையும். மனதிற்கு பிடித்த வேலைகளை சந்தோஷமாக செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் என்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். மூன்றாவது நபர் பிரச்சனையில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை கிடையாது. குறிப்பாக பாட்னரிடம் கவனமாக இருங்கள். தொழிலில் சிக்கல்கள் வரும். நிதி நிலைமையை சமாளிக்க முடியாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்க்கை இருக்கும். எதிர்பாராத நல்லது நடக்கும். நமக்கா இந்த வாழ்வு என்று நீங்களே பெருமைப்பட்டுக் கொள்வீர்கள். அந்த அளவுக்கு நல்லது நடக்கும்.ஸவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நழுவ விடாதீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒலிவு மறைவு இருக்கக் கூடாது. மனம் விட்டு பேசினால் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று முக்கியமான முடிவுகளை பொறுமையாக எடுக்க வேண்டும். கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுவது நல்லது. இருப்பினும் அன்றாட வேலையில் கவனம் இருந்தால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். அனுபவ சாலிகளின் ஆலோசனையை கேளுங்கள். அடம்பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்காதீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு படிப்பு பற்றிய விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. வேலையிலும் பின்னடைவு இருக்கும். ரொம்பவும் மன அழுத்தம் இருந்தால் அலுவலக வேலைக்கு லீவு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே ஓய்வு எடுப்பது நல்லது. மனசு எந்த ஒரு விஷயத்திலும் நிலையாக இருக்காது. குரங்கு போல தாவிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்லாத தன்மையே உங்களுக்கு தலைவலியை கொண்டு வந்து சேர்க்கும். இஷ்ட தெய்வ நாமத்தை மனதிற்குள்ளேயே சொல்லுங்கள் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். மாத கடைசி அல்லவா. சமாளிப்பது சிரமம் இருக்கும். தக்க சமயத்தில் உதவி செய்ய உறவுகள் காத்துக் கொண்டிருக்கும். அதனால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. இன்று மாலை, மனது ஆன்மீகத்தை நாடும்.

– Advertisement –

Qries
Scroll to Top