இன்றைய ராசிபலன் – 01 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 01 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சாந்தமாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் கோபப்பட மாட்டீர்கள். இதனால் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்‌. நல்ல பெயர் கிடைக்கும். பெரிய பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்தும் கொள்வீர்கள். அமைதி எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் நிதி நிலைமை சீராகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். பொது பணிகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மன நிம்மதி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும். எதிரிகளோடு பழகும் போது கவனம் தேவை. யாரையும் குறைத்து எடை போடாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை விலகும். கடன் பிரச்சனை தீரும். நீண்ட தூர பயணத்தின் போது பொருட்கள் திருடு போக வாய்ப்பு உள்ளது. பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதையோ இழந்தது போல சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுடைய அன்றாட வேலை சரியாக நடக்காது. சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. கூடுதல் கவனத்தோடு இருக்கவும். தேவையில்லாத பிரச்சனைகளை நினைத்து கவலைப்படாதீர்கள். மனபாரத்தையும் கடவுள் மீது இறக்கி வையுங்கள். நல்லது நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை பேச்சுகள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை நம்பி புது தொழிலில் முதலீடு செய்யாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீங்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும் அது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதுசாக தொழில் தொடங்குவது புதிய படிப்புக்கு பிள்ளையார் சுழி போடுவது, போன்ற முயற்சிகளை செய்யுங்கள். வேலையில் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். புதிய எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். புதிய முதலீட்டுக்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். கணக்கு வழக்குகளை கொஞ்சம் கவனத்தோடு சரி பார்க்கவும். மூன்றாவது நபரிடம் உங்களுடைய வருமானத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையில் திறமையை முழுசாக வெளி காட்டுவீர்கள். உங்களுக்குள் இப்படி ஒரு திறமை மறைந்துள்ளதா என்று மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவார்கள். திறமைக்கு உண்டான பரிசுகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. நிதி நிலைமை சீராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களுக்கு தான் மரியாதை. மாமனார் வழி உறவின் மூலம் ஆதாயம் கிட்டும். உறவுகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். தொழில் வியாபாரம் இவைகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் நிச்சயம் பிரச்சனை வரும். எந்த அளவுக்கு கூடுதல் உழைப்பை போடுகிறீர்களோ, அந்த அளவுக்கு கூடுதல் லாபம். எந்த அளவுக்கு சோம்பேறித்தனத்தோடு இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நஷ்டம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது மட்டுமே நடக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவத்தோடு இருப்பீர்கள். இறக்க குணத்தை வெளிக்காட்டுவீர்கள். இதனால் சில இடங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று புரிந்து உதவி செய்யுங்கள். கண்மூடித்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். கண்மூடித்தனமாக இருப்பதும் ஒரு வகையில் தவறுதான்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரும். நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டும். பொறுமையாக இருந்தால் அதிர்ஷ்ட காற்றை அனுபவிக்கலாம். அவசரப்பட்டவர்கள் அதிர்ஷ்ட காற்றை நழுவ விட வாய்ப்புகள் இருக்கிறது. யாரிடமும் முன் கோபப்படாதீர்கள். நல்லது எது என்பதை பொறுமையாக இருந்தால் தான் நம்மால் கண்டுபிடிக்க முடியும். அவசரப்படும்போது நம்முடன் இருக்கும் நல்லவர்களும், நம்மை விட்டு விலகி விடுவார்கள் ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக பலனை கொடுக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். செலவை குறைத்துக் கொள்ளவும். இறைவழிபாட்டில் மனதை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top