நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

இன்றைய ராசிபலன் – 01 ஜூன் 2026 nithyasubam

இன்றைய ராசிபலன் – 01 ஜூன் 2026 nithyasubam


– Advertisement –

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுபயோகமான நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். புத்திர பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நற்பலன்கள் கிட்டும். காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று மிகுந்த முனைப்புடன் செயல்பட வேண்டும். முக்கிய சந்திப்புகளுக்கும், பணிகளுக்கும் காலந்தவறாமல் சென்று சேர்வது அவசியம். காலதாமதத்தால் சிறுசிறு தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட நல்ல பலன்கள் கிட்டும்.

– Advertisement –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவு தரும் நாளாக அமையும். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பகைமை உணர்வு நீங்கி, சகிப்புத்தன்மை மேம்படும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். இறை வழிபாட்டில் ஈடுபடுவது மனத்தெளிவை மேலும் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிறு மனக் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற சிந்தனைகள் அன்றாடப் பணிகளைப் பாதிக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தி, தேவையற்ற அலட்டல்களைத் தவிர்க்கவும். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்குக் காப்பரணாக உள்ளது. மனசாட்சிக்கு உகந்த வகையில் செயல்பட்டு, முன்கோபத்தைத் தவிர்ப்பது நற்பலன்களைத் தரும்.

– Advertisement –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வழிவகை உண்டாகும். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி காணப்படும். உறவுகளிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லிணக்கம் உண்டாகும். இரவு ஆழ்ந்த, அமைதியான உறக்கம் கிட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை தலைதூக்க வாய்ப்புள்ளது. விரைவான முன்னேற்றம், செல்வம் ஈட்டும் எண்ணத்தில் சிலர் குறுக்கு வழிகளை நாடத் தூண்டப்படலாம். எனினும், சட்டத்திற்குப் புறம்பான, நேர்மையற்ற செயல்களை அறவே தவிர்க்க வேண்டும். எவ்வேளையிலும் நேர்மையுடன் செயல்படுவது நிலையான நற்பலன்களைக் கொண்டுவரும்.

– Advertisement –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியுடன் திகழும். தன்னுடைய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேறுவர். தேவையான நிதி வசதி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வீட்டிற்குத் தேவையான பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வீண் விரயச் செலவுகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாய்ப்புகள் நிறைந்த நாளாக அமையும். புதிய முயற்சிகள் மூலம் நல்ல பெயர், புகழ் கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு மனத்தெளிவை ஏற்படுத்தும். தேவையான நிதி வசதி கைகூடும். கடன் சுமை குறையும். கணவன் மனைவி இடையே நிலவி வந்த சிறு விரிசல்கள் நீங்கி நல்லுறவு மலரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சூழல் நிலவும். ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரப் பணிகள் சுபமாக முடிவடையும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுவீர்கள். வீண் விரயங்கள் குறைந்து, வருமானம் பெருகி, சேமிப்பு கூடும். இறைவனுக்கு நன்றி கூறி நற்பலன்களைப் பெறுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவர். புதிய விஷயங்களை எளிதில் கற்றுத் தேறுவர். நல்ல பெயர், புகழ் கூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நீண்ட தூரப் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று தங்கள் பணிகளில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவர். அவசரமின்றி, விவேகத்துடன் முடிவெடுக்கும் ஆற்றல் மேலோங்கும். பிறர் வியக்கும் வண்ணம் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும் நாளாகும். இறைவனுக்கு நன்றி பாராட்டி, நற்பலன்களை அனுபவிப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றப் பாதை புலப்படும். தேவையற்ற அலைச்சல் இன்றி, போதுமான ஓய்வு, சௌகரியங்கள் நிறைந்த நாளாக இது அமையும். நிதிநிலை சீராகும். கடன் சுமை குறையும். தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றி மனநிறைவு கொள்வீர்கள்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://telegram.me/tamil_astrology_nithyasubam

Today Rasi Palan in Tamil, Indraya Rasi Palan, Daily Horoscope Tamil

Scroll to Top
I am Online
I am Online