இன்றைய ராசிபலன் – 06 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 06 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள், வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். தேவையில்லாத மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்லதை செய்யும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை முதலீடு செய்வீர்கள். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் பார்ட்னரின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்பின் தெரியாத நபரை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வோடு சேர்த்து இடமாற்றம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். நல்லதே நடக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய குணம் அதிகமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவீர்கள். தொழிலில் ஏற்ற இறக்கம் காணப்படும். அனுபவரீதியாக நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான தருணம் இது. ஆகவே பிரச்சனைகளை கண்டு துவண்டு போகக் கூடாது. வாகனங்களில் செல்லும்போது கவனத்தோடு இருக்கவும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரியங்கள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாளாக பிரச்சனையில் இருந்த காதல் கைகூடும். கணவன் மனைவி க்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக வேலையை இழக்காதிங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்வு காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு வாங்குவீர்கள். என்றோ முதலீடு செய்து வைத்த பணத்திலிருந்து இன்று பெரிய லாபம் கிடைக்கும். விற்க முடியாத சொத்துகளை விற்கலாம். நீண்ட நாள் கிடப்பில் போட்டு வைத்திருந்த பிரச்சனைகள் எல்லாம் இன்று முயற்சி எடுக்கும் பட்சத்தில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் இருந்து 1/2 மணி நேரம் முன்பாகவே செல்லவும். எந்த வேலையையும் இந்த நேரத்திற்குள் முடித்து தருகிறேன் என்று வாக்கு தரக்கூடாது. வாக்கை தவறினால் அவமானத்தை சந்திக்க கூடிய சூழல் உண்டாக்கலாம். கடன் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். கைநீட்டி கடன் வாங்கி இருந்தால் கடன்காரரை அழைத்து நீங்களே தவணை தேதியை சொல்லி விடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பட்டாம்பூச்சி போல அங்கும் இங்குமாக அலைந்து கொண்டே இருப்பீர்கள். ஒரு இடத்தில் தங்கவேமாட்டீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். விவசாயத் தொழில் இருப்பவர்களுக்கு புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நல்லது நடக்கும் நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம், குழப்பத்தை உண்டு பண்ணும்‌. புதிய காரியங்களை இன்று தொடங்க வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். கணவன் மனைவி கிடையே வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சண்டை வந்தால் யாராவது ஒருவர் வாயை மூடிக்கொள்ளவும். குழந்தைகள் நல்லெண்ணில் அக்கறை காட்டுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் அமோக வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவால் குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெற்றவர்கள் மன நிறைவு அடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். பிரமோஷன் கிடைக்கும். இதனால் சம்பள உயர்வு இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயங்களை எல்லாம் சாதித்துக் கொள்வதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் கட்டாயம் கட்டுப்பாடு தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களால் முடியாத காரியத்தை கூட நீங்கள் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு என்று தனி கௌரவத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். நாலு பேர் மத்தியில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கடன் சுமை குறையும் நிதி நிலைமை சீராகும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top