இன்றைய ராசிபலன் – 10 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 10 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நீங்கள் நினைத்த நிறைய நல்ல மாற்றங்கள் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். சகோதரர்களுடைய பாசம் பலம் பெறும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் சுப காரியம் பேச்சுக்கள் துவங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி உண்டாக கூடிய நாளாக இருக்கும். எதிலும் வீண் பேச்சு இருக்காது. உங்களுடைய செயலில் மட்டும் தான் கவனம் காட்டுவீர்கள். வேலையில் நீங்கள் நினைத்த பதவி உங்கள் கைக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சம்பள உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன தகராறுகள் வரும். சிறியவர்களுக்கு, பெரியவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். பல நாள் தொல்லை கொடுத்து வந்திருந்த பிரச்சனைகள் விலகும். நிதிநிலைமை சீராகும். கடன் பிரச்சனையில் இருந்தும் வெளிவருவீர்கள். பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க துவங்கி விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்காக பெருகும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். உடல் அசதி நீங்கும். இதனால் வரை தொடர்ந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் இன்றோடு முடிந்து விடும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவலைப்படாதீங்க செலவு செய்ய செய்ய வருமானம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடை செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய பாட்னை சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தேவையற்ற நண்பர்களோடு வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று கூடவும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய காதல் திருமணம் வரை செல்லும். காதலை பற்றி வீட்டில் பெரியவர்களிடம் சொல்லுங்கள். பச்சை கொடி காட்டுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் இல்லை என்றாலும், பெருசாக நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். சில பேர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுசாக வேலை தேடலாம். புதுசாக படிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது பொருட்கள் வாங்கலாம். இப்படி இன்று நீங்கள் துவங்க கூடிய வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமானதாக அமையும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அடுத்தவர்கள் கஷ்டப்பட்டு செய்யக்கூடிய வேலையை நீங்கள் சுலபமாக செய்து முடிப்பீர்கள். திறமை பல மடங்கு வெளிப்படும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலையை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குறிப்பாக மாணவர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆசிரியர்களிடம் பாராட்டையும் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். உங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்ய தானாக முன் வருவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சில பேர் ரத்த தானம் செய்வது போன்ற காரியங்களில் கூட ஈடுபடலாம். இன்று உங்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். வேலை தொழிலில் பெருசாக பிரச்சனை எதுவும் இருக்காது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதமும் பெரியவரின் ஆசீர்வாதமும் பெற்று இந்த நாளை சந்தோஷமாக நகர்த்திச் செல்வீர்கள். மேலதிகாரிகளை மட்டும் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். எந்த விஷயத்திலும் பொய் சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top