இன்றைய ராசிபலன் – 11 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 11 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய முன்னேற்றத்தை பற்றி நீங்களே பெருமையாக நினைத்துக் கொள்வீர்கள். வாழ்க்கையின் புதிய துவக்கங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். சில பேருக்கு பணி சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இன்று விடுமுறை நாள். பண்டிகை நாள் என்று இருந்தாலும், தவிர்க்க முடியாத வேலைகள் சில பேருக்கு வரும். இதன் மூலம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் வரலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று நல்லதே நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் பூஜை புனஸ்கார வேலைகளை மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். சுப செலவுகள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். வேலை பூஜை இவைகளை ஈடு கொடுக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். எந்த ஒரு செயலையும் சரியாக பிளான் செய்தால், நிச்சயம் வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்க முடியும். காலையில் முன்கூட்டியே கண்விழித்து ஒரு மணி நேரத்திற்கு முன்பே உங்கள் வேலையை தொடங்கி பாருங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் மீது கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை அடுத்தவர்களிடம் வெளிப்படையாக வெள்ளந்தியாக பேசாதீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று அமைதியாக இருந்தால் இந்த நாள் நல்லபடியாக செல்லும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் தெளிவடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் உங்களுடைய வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கு உண்டான முயற்சிகளையும் செய்வீர்கள். நல்லதே நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளோடு நேரத்தை கழிக்க சந்தர்ப்பங்கள் அமையும். சுப செலவுகள் உண்டாகும். இறைவழிபாட்டை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாட்டு முறைகளில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை செய்வீர்கள். அந்த முயற்சியில் உடனடியாக வெற்றியும் காண்பீர்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு அடைய வேண்டும் என்ற கனவு சில பேருக்கு நினைவாகும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு நினைவாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலை அதிகமாக இருக்கும். தொழிலிலும் நிறைய வேலைகள் வரிசை கட்டி நிற்கும். ஆனாலும் அசராது அந்த வேலையை எல்லாம் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இன்று நாள் முழுவதும் உற்சாகத்தோடு இருப்பீர்கள். பூஜை புணஸ்காரர்கள் எல்லாம் சந்தோஷமாக செய்து இந்த நாளை கடந்து செல்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை சரியான நேரத்தில் முடிக்க முடியாது. புதிய முயற்சிகளை இந்த நாள் செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ள பாருங்கள். மாணவர்களுடைய கல்வியில் ஆர்வம் காட்டவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாக கூடிய நாள். உற்சாகத்தோடு இந்த நாளை துவங்குவீர்கள். ஆன்மீக வழிபாட்டில் மனது ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத காரியத்தை இன்று செய்யுங்கள். வெற்றி அடையலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். உங்களை டென்ஷன் ஏற்றிவிட சில பேர் வருவாங்க. அவர்களை எல்லாம் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் திறமையும் வெளிப்படும். நல்லது நடக்கக்கூடிய நாள். நிம்மதியாக இறை வழிபாடு செய்யக்கூடிய நாள். செலவுகள் குறையும். சேமிப்பு உயரும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top