இன்றைய ராசிபலன் – 12 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 12 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய துவக்கங்கள் வெற்றியை கொடுக்கும். பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனநிறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சொந்த பந்தங்களின் வருகை கொஞ்சம் சுப செலவை ஏற்படுத்தும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நாளில் சந்தோஷத்திற்கு ஒரு துளியும் குறை இருக்காது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று புதிய துவக்கத்தை நன்றாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய தொழிலை விரிவு படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். ஆன்மீக ரீதியான வழிபாடு மன அமைதியை கொடுக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீண் செலவு குறையும். உற்சாகத்தோடு வேலைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வரவு நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். லாபத்தை ஈட்டக் தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற விஷயங்களில் அனாவசியமாக பேசக்கூடாது. பேச்சை குறைத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. இல்லையேல் தேவையற்ற பிரச்சனைகள் வரும். புதிய பகைகள் உண்டாவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். மூன்றாவது நபரை பற்றி சிந்திக்க வேண்டாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்ட காற்று வீசும். நினைத்து பார்க்காத நல்ல காரியங்கள் தானாக நடந்து முடியும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுபடக் கூடிய நாள் இது. புதிய துவக்கங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். சேமிப்பு உயரும். புதிய துவக்கங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளின் படிப்பு சார்ந்த விஷயத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் இருந்த டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். உறவினர்களோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை செலவை குறைப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகள் படுவேகமாக நடக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். செலவுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் வேலையை கெடுக்கும். புதிய முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் வருவது போல தெரிந்தாலும், அதையெல்லாம் தாண்டி உங்களுடைய வெற்றி வாகையை சூடுவீர்கள். விடாமுயற்சி தான் இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். பிரச்சனைகளை கண்டு அசந்து போய் உட்கார கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் எஇன்று கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் இருக்கக் கூடாது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டாம். கொஞ்சம் இந்த நாளை உஷாராக கடந்து செல்லுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். நாலு பேர் முன்பாக தலை நிமிர்ந்து வாழ்வதற்கு உண்டான தகுதியை பெறுவீர்கள். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தொழிலில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மூன்றாவது நபர் சொல்வதை நம்பி தெரியாத தொழிலை துவங்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகளுடைய படிப்பிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியும் கொடுக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top