இன்றைய ராசிபலன் – 16 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 16 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். ஆர்வம் இல்லாமல் தொழில் வேலை இவைகளில் ஈடுபடக்கூடாது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று மாலை பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருக்கவும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். நினைத்த வேண்டுதலை நினைத்தபடி நிறைவேற்றி விடுவீர்கள். கோவில் குளங்களுக்கு குடும்பத்தோடு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். மன நிம்மதி பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நேர்மறையான எண்ணம் உங்களுக்கு இருப்பதால் பிரச்சனைகளிலிருந்து சுலபமாக வெளி வருவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீன் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரிப்பதால் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு இருக்கும். உடல் அசதியால் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாது. உற்சாகம் குறையும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். அதையெல்லாம் அனுபவமாக ஏற்றுக் கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான சாந்தமான நாளாக இருக்கும். பெரிய அளவில் போட்டி பொறாமைகள் இருக்காது. எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். அம்பானியின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். முடிந்தால் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு, சம்பள உயர்வை பெறுவீர்கள். எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். அக்கம் பக்கம் வீட்டாரிடம் பழகும் போது கவனமாக இருக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் ரிலாக்ஸ் ஆன நாளாக இருக்கும். வேலை களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இல்லத்தரசிகளுக்கு இன்று மாலை நேரத்திற்கு மேல் சந்தோஷம் பிறக்கும். மன குழப்பங்கள் நீங்கும். நினைத்த நல்ல காரியங்களை எல்லாம் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். காலை நேரத்தில் மட்டும் கொஞ்சம் மன சஞ்சலம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்கள் சுப காரியம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். மனநிறைவோடு இன்றைய நாள் செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் தரும் விஷயங்கள் நடந்தாலும் மனது ஏதோ இழந்ததைப் போல சிந்தித்துக் கொண்டே இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். குடும்ப விஷயங்களை வெளி நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு நிறைய கண் திருஷ்டி இருப்பதால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிம்மதியாக இருக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த வேலையை சரியாக நடத்தி முடிப்பீர்கள். உற்சாகம் அதிகரிக்கும். அம்பாளின் அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுறுசுறுப்பாக இந்த நாள் வேலையை செய்து முடிக்க இறைவனின் அருள் உங்களுக்கு கிடைத்தது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top