இன்றைய ராசிபலன் – 16 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 16 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டம் இருக்கும். செய்யும் வேலையில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சங்கடத்தோடு இருப்பீர்கள். கவலைப்படாதீர்கள் விடாமல் முயற்சி செய்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள். தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரும். முதலீட்டில் கவனமாக இருக்கவும். யாரையும் முழுசாக நம்ப கூடாது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுபகாரிய தடைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புத்திசாலித்தனம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் பிரச்சனை தொழிலில் பிரச்சனை என்றால், அதையெல்லாம் சொடக்கு போடும் நேரத்தில் சரி செய்து விடுவீர்கள். தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பீர்கள். துணிவோடு உங்களுடைய எதிரிகளை எதிர்கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம். மனைவியை அனுசரித்து செல்வது நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கக்கூடிய நாளாக இருக்கும்‌. நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் வேலைகளை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று நல்லபடியாக நடந்து முடியும். அரசாங்க வேலைகளையும் இன்று கையில் எடுத்து முடிக்கலாம். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பிரச்சனைகளை தரக்கூடிய எதிரிகள் எல்லாம் விலகி நிற்பார்கள். நல்லது செய்யக்கூடிய நண்பர்கள் எல்லாம் உங்களோடு துணையாக நிற்பார்கள். கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் தடுமாற்றம் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். முக்கியமான விஷயங்களை இன்று செய்ய வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. பிரச்சனைகளை பெருசாக்காதீங்க. விட்டுக் கொடுத்து நடக்கவும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யவே கூடாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கும். பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்களை மீண்டும் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். முதலீட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும்‌. நீண்ட நாட்களாக சுமந்து கொண்டு இருந்த மனபாரத்தை இறக்கி வைப்பீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். வெளியூர் பயணங்களில் மூலம் நல்லது நடக்கும். வேலையில், செய்த வேலைக்கும் மேலே பாராட்டுகளும் புகழும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்பும் சின்னதாக ஒரு பிளான் போட்டுக்கோங்க. இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு செயல்பட்டால் மட்டும்தான் இன்றைய நாள் பிரச்சனை இருக்காது. குறித்த நேரத்தில் சொன்ன வேலையை முடித்துக் கொடுக்கும் போது தான் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். இல்லை என்றால் தலை குணிவு ஏற்படும் ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவு தான் வேலைகளை செய்து முடித்தாலும், மனதிருப்தியே இருக்காது. ஏதோ ஒரு குறையை வைத்தது போலவே உணர்வு தோணும். எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் மனது நிறையாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்ற பேராசை இருக்கும். இதனாலேயே உங்களுடைய இந்த நாள் பெரிய ஓட்டத்தோடு இருக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். அதை நீங்கள் இன்று உணர்ந்து நடக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மனது தெளிவாக இருக்காது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். தொழிலில் மனநிறைவு ஏற்படாது. வேலை செய்யும் இடத்தில் அறியாமல் செய்த தவறுக்கு திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படி ஒட்டுமொத்தமாக உங்கள் மனதை காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடக்கலாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைவாக இருக்கும். தொழிலில் மகத்தான வெற்றியை அடைவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். அயராது உழைத்ததன் பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளோடு சண்டைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் கவனமாக இருக்கவும் பெரியவர்களை அனுசரித்து செல்லவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். அனாவசியமாக அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க. செலவை குறைத்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்காது. வேலையை விடக்கூடிய யோசனையை விட்டு விடுங்கள். இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியற்ற சூழல் ஏற்படும். மனக்கவலை ஏற்படும். நல்லது நடப்பதில் கொஞ்சம் தாமதமும் உண்டாகும். காரணம் உங்களுடைய ஈகோ. எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். எல்லாம் என்னால் சாதிக்க முடியும் என்ற தலைக்கனத்தை விட்டுக் கொடுங்கள். தன்னம்பிக்கை இருக்கலாம். ஆனால் தலைகனம் இருக்கக் கூடாது. ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். உடல் பருமனாக இருப்பவர்கள் எடை குறைப்பதில் அக்கறை காட்டவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top