
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எதைத் தொட்டாலும் அது வெற்றி அடையும். நீங்கள் பல மடங்கு லாபத்தை பெற இன்று எந்த வேலையை வேண்டும் என்றாலும் துவங்கலாம். உதாரணத்திற்கு சீட்டு போடுவது, வங்கியில் அக்கவுண்ட் துவங்குவது, பிள்ளைகளுடைய பெயரில் டெபாசிட் செய்வது, எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவது, இது போன்ற முயற்சிகளில் இன்று ஈடுபடுங்கள் ரொம்ப நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் இல்லாத நலமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் நேரத்திற்கு முடித்து விடுவீர்கள். மனமகிழ்ச்சி நிறைந்த செய்தி ஒன்று தொலைபேசியின் மூலமாகவோ, அல்லது நண்பர்கள் உறவுகள் மூலமாகவோ உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சந்தோஷம் பிறக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வாரத் தொடக்கத்திலேயே சந்தோசமும் உற்சாகமும் இருக்கும். அதிக வேலையை பார்த்து பயப்படவே மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு தேவையான அத்தனை நலனிலும் அக்கறை காட்டுவீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் நிறைந்த, சிரமம் நிறைந்த நாளாக தான் இருக்கும். மனதிற்குள் ஒரு இனம் புரியாத குழப்பம் இருக்கும். இருந்தாலும் நம்பிக்கையை நீங்கள் தளர விடக்கூடாது. தைரியத்தை விட்டு விடக் கூடாது. சிக்கல்களில் இருந்து விடுபட இறைவழிபாடு செய்யுங்கள். இறைவனின் மீது மொத்த பாரத்தையும் போடுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது இந்த நாள் இறுதியில் நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று சுயநலம் இல்லாமல் சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழிலில் கல்லாக கட்டும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். தவறாக புரிந்து கொண்டவர்களை சரியாக புரிந்து கொள்வீர்கள். நண்பர்களும் உறவுகளும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த நாள் தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய நாளாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். முன்பின் தெரியாத நபர்களுடைய சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். புது உறவுகள் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வெற்றிவாக சுடக்கூடிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இன்றைய தினம், நிறைய நன்மை உண்டு. வீட்டில் உங்களை புரிந்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்த உறவுகள் கூட தானாக உங்களைத் தேடி வருவார்கள். மனதிற்கு சந்தோசம் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் தவறாக செய்த காரியங்கள் கூட, நல்லபடியாக நடந்து முடியும். அடுத்தவர்கள் செய்த நல்ல காரியத்திற்கு கூட உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். நீங்கள் செய்த தவறை மன்னித்து, மனதிற்கு பிடித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இப்படி ஏதாவது ஒரு நல்லது இந்த நாளில் நடந்து கொண்டே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் உங்களுடைய வேலையில் கவனமாக இருக்க வேண்டும். சில பேருக்கு தாயகம் திரும்பவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். மன சங்கடங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. எதிர்பார்த்த நல்லது நடக்காமல் போகலாம். மனது உடைந்து போகக்கூடாது. எதுவாக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி வெற்றி அடைய வேண்டும் என்ற குணத்தை கொண்டு வாருங்கள். வாழ்க்கைத் துணையோடு அனுசரித்து செல்லுங்கள் நல்லது நடக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam