இன்றைய ராசிபலன் – 18 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 18 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வர வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சோர்ந்து போகக்கூடாது. உங்களுடைய துணிச்சல் தான் இன்றைக்கான வெற்றியை தேடி தரும். வீட்டில் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வரும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து பேசவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எலியும் பூனையுமாக இருந்த கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் உண்டாகும். சேர்த்து வைத்த சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய மதிப்பு மரியாதையும் கூடும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். தெரியாத மூன்றாவது நபரிடம் உங்களுடைய வருமானம், உங்களுடைய வீட்டு பிரச்சனையை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். காலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கினாலும், மாலை நேரத்திற்குள் உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேசினால் எல்லாம் சரியாகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சூழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நண்பர்களாகவே பாவித்து உங்களுடனே இருந்து பழகியவர்கள் எல்லாம் உங்கள் முதுகில் குத்தி விடுவார்கள். நம்பிக்கை துரோகத்தை பற்றி இன்று நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள். மனசு உடைந்து போகக்கூடாது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று நினைத்தால் இன்று பிரச்சனை வராது. கடவுள் உங்கள் பக்கம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்கள் அவர்களுடைய துறையில் சிறப்பாக சாதித்து காட்டுவீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். வீட்டு பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். முழு நேரமும் வேலையை பற்றி சிந்திக்காமல் மனைவி பிள்ளை அம்மா அப்பா இவர்களையும் கவனிப்பது சந்தோஷத்தை கொடுக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். ஏதாவது கோவிலுக்கு சென்று குடும்பத்தோடு வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மன நிம்மதி அடைப்பீர்கள். கடன் தொல்லை தீரும். நிதி நிலைமை சீராகும். உற்றார் உறவினர்களின் வருகை மன நிம்மதியை கொடுக்கும். தொழிலிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்படவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்கோபடக் கூடாது. மேலதிகாரிகளிடம் பணிவாக பேசவும். நிதி நிலைமை சீராக இருக்காது. சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் அனுசரணையான பேச்சு உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கும். தொழிலில் சின்ன சின்ன தோல்வி ஏற்படும் முதலீட்டின் போது கவனம் தேவை.
தனுசு
தனசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீங்கள் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு உங்களைத் தேடி வரும். மதிப்பும் மரியாதையும் தேடி வரும். வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமை நீங்கும். மன நிம்மதி அடைவீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று தனித்துவமாக திகழுவீர்கள். நாலு பேர் மத்தியில் உங்களை மட்டும் குறிப்பிட்டு பேசும் படி நீங்கள் நடந்து கொள்வீர்கள். அந்த அளவுக்கு திறமையாக உங்களுடைய செயல்பாடுகளும் இருக்கும். வேலையில் சம்பள உயர்வு பதிவு உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் அடுத்தவர்கள் உங்களை அன்னாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி அடைவீர்கள். அவமானப்படுத்தியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது. சிக்கலில் சிக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். தொழிலில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சில பேருக்கு பிரஷர் தாங்க முடியாமல் மண்டை வலி வருவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது. உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ஆரோக்கியம் கெட்டுப் போகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையில்லாத சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. வேலையில் சிக்கல்கள் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. எப்போதுமே மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். மனதை அலைபாய விடாதீர்கள். ஆன்மீகத்தில் மனதை செலுத்துங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். பொறுமையை மட்டும் என்றும் கைவிடக்கூடாது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top