
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று லாபகரமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு ஆதாயம் தேடுவீர்கள். மூச்சு விட்டால் கூட அதற்கு என்ன லாபம் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு இன்று உங்களிடம் அதிகப்படியான சுயநலம் இன்று வெளிப்படும். அது ஏன் என்று தெரியாது. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா. இந்த சுயநலம் சில பல பிரச்சனைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வரவு செலவு கணக்கை பார்த்து எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் அதிகமாக மூழ்கி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. பிரச்சனைகள் பெருசாக இல்லை என்றாலும், சில சமயம் நம்முடைய மனது நாம் சொல்வதை கேட்காது. நம்முடைய மூளை அதிகமாக யோசிக்க துவங்கிவிடும். அப்போது கொஞ்சம் கூடுதல் டென்ஷன் வரும். உங்களுக்கு இன்று இதுபோல சிரமங்கள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். நிதிநிலைமை சீராகும். சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பெரியவர்களுடைய பேச்சை கேட்டு நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். அடம்பிடித்து எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். இன்று காரிய சித்தி ஆகும் நாள். சந்தோஷத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். தயாராக இருக்க வேண்டும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுப மங்கள நாளாக இருக்கும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பணப்பரிவர்த்தனையில் அலட்சியம் வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வீட்டிற்கு தேவையான ஆடை ஆபரண பொருட்களை வாங்கி மகிழலாம். பெண்களுக்கு இன்று வெற்றி தரும் நாளாக இருக்கும். வீட்டில் உறவுகளின் வருகை கொஞ்சம் சுப செலவை ஏற்படுத்தும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சரியான பாதையில் செல்லும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் மன நிம்மதியோடு இருப்பீர்கள். வேலையில் உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேர் வழியாக நடப்பது உங்களுக்கு நன்மையை செய்யும். எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். கெட்ட பெயர் எடுத்த இடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அயராது உழைப்பீர்கள். வியாபாரத்தை முன்னுக்கு கொண்டு வர முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். விடாமுயற்சி இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். கொஞ்ச நேரம் தூங்கலாம், பிறகு வேலையை செய்து கொள்ளலாம் என்று சொல்லி, இன்று மாலை வரை நேரத்தை வெறுமனே நகர்த்திச் செல்வீர்கள். நேரம் வீணாகும். இது மட்டும் தான் மிச்சம். வேலையை செய்யாமல் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஒரு உறுதியோடு செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயவே மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களைப் பார்க்கும்போது எல்லோரும் உங்களைப்போல வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இன்று நீங்கள் வாழும் வாழ்க்கை அடுத்தவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்னதாக ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்ற வாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்க வேண்டும். வேலை வியாபாரம் எதுவாக இருந்தாலும் இன்று கொஞ்சம் நிதானம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம், பதட்டம் இன்று இருக்கும். பயப்படாதீங்க, வேலையில் மட்டும் கவனம். செலுத்துங்கள். அளவான உணவை, ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். நேரம் கிடைக்கும்போது ஓய்வு எடுங்கள். இறைவன் உங்கள் பக்கம் இருப்பான். உங்களுடைய மனதை தைரியமாக வைத்துக் கொண்டால், வாழ்க்கை பயணம் தைரியமாக இருக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam