இன்றைய ராசிபலன் – 21 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 21 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் பணிவான நாளாக இருக்கும். யார் என்ன சொன்னாலும் கோவமே வராது. எல்லோருக்கும் அடங்கி போவீங்க. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியாது. என்று உங்களுடைய பொறுமையை பார்த்து பூமாதேவியே பொறாமைப்படும். பொறுமையாக இருந்து நிறைய வில்லை நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனால் உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் டென்ஷன் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வீட்டில் பெரியவர்களை எதிர்த்து பேசாதீங்க. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையும் சிறப்பாக நடக்கும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். சொன்ன நேரத்திற்கு சொன்ன வேலையை சரியாக முடித்து தருவீர்கள். தொழிலில் மட்டும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மூன்றாவது நபரை நம்பி உங்களுடைய முழு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். முன்பின் தெரியாத நபரோடு எந்த வியாபாரமும் செய்ய வேண்டாம். ஒப்பந்தமும் போட வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை சரிவர செய்ய ரொம்பவும் முயற்சி செய்வீர்கள். இருந்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் தடைகள் வரத்தான் செய்யும். முயற்சிகளை கைவிட வேண்டாம். விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் கொஞ்சம் மன கஷ்டம் இருக்கும். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது அல்லது அவர்கள் உங்களை விட்டு நீண்ட தூர வேலைக்கு செல்வது போன்ற விஷயங்கள் நடக்கலாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பரிசு பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு பரிசு வாங்கி கொடுக்கலாம், மனைவி கணவனுக்காக பரிசு வாங்கலாம். அல்லது உங்களுக்கான பாராட்டு கிடைத்து அதன் மூலம் அவாடு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பக்தி பரவசம் நிறைந்த நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமையும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல செல்லும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு தீபாவளி பர்ச்சேஸ் நடக்கும். கேட்கவா வேணும். வருடத்திற்கு ஒரு முறையோ இருமுறையோ புது துணி எடுக்கப் போகின்றோம். கணக்கு பாக்காதீங்க. நிம்மதியா செலவு செய்யுங்க. அளவுக்கு மீறி செலவு செய்யக் கூடாது, கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது அவ்வளவுதான். வேலை தொழிலிலும் உங்களுடைய கவனம் இருக்கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். வருபவர்களை கவனிப்பதற்கு நேரம் சரியாக இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இன்று சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். தொழிலை விரிவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழிலை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல மிகவும் கஷ்டப்படுவீர்கள். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய தொழில் அதிபர் வரை இன்று வெற்றி காணலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். எந்த முடிவை எப்படி எடுப்பது என்று தெரியாமல் தடுமாற்றம் இருக்கும். அனுபவ சாலிகளிடம் கேளுங்கள். ஆலோசனை பெறுங்கள். பிறகு முடிவை எடுக்கலாம். குழப்பமான நிலையில் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது தான் நல்லது. முடிந்தால் நேரம் கிடைத்தால் முடிவு எடுக்கும் விஷயத்தை இரண்டு நாள் தள்ளி போடவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தீராத பிரச்சனையில் இருக்கும் விஷயங்களை இன்று கையில் எடுக்கலாம். குறிப்பாக கோர்ட் கேஸ் வழக்குகள் விற்காமல் இருக்கும் சொத்து, அல்லது வாங்க வேண்டிய சொத்து, கைக்கு வராமல் இருக்கும் சொத்து போன்ற விஷயங்களை எல்லாம் இன்று முயற்சி செய்தீர்கள் என்றால் நல்லபடியாக நடந்து முடியும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக பேராசை வரும். அது பெரிய நஷ்டத்தில் போய் முடியும். எதற்கும் அதிகமாக ஆசைப்படாதீர்கள். அளவோடு சந்தோஷ படுங்கள். அளவோடு பேசுங்கள். அளவோடு செலவு செய்யுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற விஷயத்தை இன்று நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top