இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் யாரையும் எதிர்த்து சண்டை போட வேண்டாம். பணிவாக பேசுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்வது என்று நன்மையை கொடுக்கும். தொழிலில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத நபரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடனுக்கு வியாபாரம் செய்தவர்கள் நம்பிக்கை துரோகம் செய்யலாம். கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேசக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று கவனமாக இருக்கவும். ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு முன்பாக இதை நான் செய்து விடுவேன், இது எனக்கு தூசி மாதிரி, என்ற அனாவசிய வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது. பிறகு அந்த வேலையை செய்ய முடியாமல் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தலைகுனிவு ஏற்படலாம் உஷாராக இருங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாள் சுறுசுறுப்பாக தொடங்கும். எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்து விடுவீர்கள். மேல் இடத்தில் நல்ல பெயரும் கிடைக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். கை நிறைய சம்பாதிப்பதற்கு உண்டான வழிகள் வாசல் கதவை தட்டும். கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு இன்றைய நாள் ஓடிவிடும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் பின்னடைவு இருக்கும். காரணம் உங்களுடைய மன பயம். அடுத்தவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ, என்று உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் வாழ மறந்து விடுவீர்கள். அடுத்தவர்களை பற்றி சிந்திக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் தயக்கம் வேண்டாம். துணிவுடன் செயல்பட்டால் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். எதிரிகளுடைய தொல்லை அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுடைய வேலையில் சிறிதளவும் கவனம் குறையாது. பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் அளவுக்கு தெம்பு உங்களுக்கு இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மனைவியின் ஆதரவால் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கும். காலை நேரம் மந்தமாக சென்றாலும், போகப்போக உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு வந்துவிடும். வார தொடக்க நாளிலேயே புதிய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அயராது உழைக்க வேண்டும். ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிக்க முடியாது. இதனால் வேலையில் பின்னடைவு உண்டாகும். மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும். பிரச்சனைகளை பெருசாக்காதீங்க. தவறுகளை ஒத்துக் கொள்ளுங்கள். தொழிலில் கூடுதல் உழைப்பை முதலீடாக போட்டால்தான் நினைத்ததை விட அதிக லாபத்தை எடுக்க முடியும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் அக்ரிமெண்ட் போடாமல் பணத்தை கொடுக்காதீங்க. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரும். சண்டை பெருசாகாமல் பார்த்துக் கொள்ளவும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுகள் தேவை. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மேலதிகாரிகளுடன் பாராட்டு கிடைக்கும். வேலையில் டார்கெட்டை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top