இன்றைய ராசிபலன் – 25 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 25 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் சொன்னபடி முடித்துக் கொடுத்து விடுவீர்கள். பாராட்டுகளும் கிடைக்கும். தொழிலில் கடின உழைப்புக்கு ஏற்ற லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். வருமானம் சீராக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இரண்டு பேர் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால் அதை நீங்கள் மட்டும் செய்யுங்கள். உங்கள் பொறுப்புகளை இன்னொருவர் கைக்கு மாற்றிவிட வேண்டாம். சில பேருக்கு நம்பிக்கை துரோகம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப விஷயங்களை வெளி ஆட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளை எல்லாம் சுலபமாக நீங்களே தீர்த்து வைத்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காணவும் வழிகாட்டி கொடுப்பீர்கள். நண்பர்கள் உறவுகளிடத்தில் இருந்து வந்த பகைகள் நீங்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது சோர்வாக காணப்படும். எந்த வேலையிலும் ஆர்வம் அதிகமாக இருக்காது. இன்றைக்கான வேலையை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடுவீர்கள். ஆனால் அது உங்களது வேலை சுமையை கூட்டிவிடும். நாளைய தினம் பிறகு பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை அன்றைக்கான வேலையை அன்றே முடிப்பதுதான் நல்லது. சோம்பேறித்தனத்தை தகர்க்கவும். இறை வழிபாட்டில் மனதை செலுத்துங்கள். எண்ணங்கள் சிதறாது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கான நாளாக இருக்கும். நேரம் செல்வதே தெரியாது. வேலை சுமை தெரியாது. தொழிலில் சுலபமாக உங்களுடைய லாபத்தை எடுத்து விடுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் பிளான் செய்தபடி எல்லா வேலையையும் சரியாக முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் பாட்னருடன் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். அமர்ந்து பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். யாரிடமும் சண்டைக்கு நிற்காதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தொழிலில் நல்லது நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தொலைநோக்கு சிந்தனை இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக நம்ப மாட்டீர்கள். எல்லா விஷயத்திலும் அலசி ஆராய்ந்து பார்த்த பின்பே ஏற்றுக் கொள்வீர்கள். இதனால் ஏமாற்றம் இருக்காது. உங்களுடைய பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அசௌகரியமான நாளாக இருக்கும். எல்லா விஷயமும் நீங்கள் நினைத்தபடி நடக்காது. இதனால் கொஞ்சம் டென்ஷன் ஏற்படும். தலைவலி உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. எல்லா நாளும் நாம் நினைத்தது போல் அமைந்துவிட்டால் பிறகு கடவுள் எதற்கு. சில கெட்ட விஷயங்கள் நமக்கு நல்ல அனுபவத்தை சொல்லிக் கொடுக்கும். இன்று நடக்கக்கூடிய கெடுதலை நீங்கள் பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டது என்றால் பெரிய அளவில் பிரச்சனை வராது. சின்ன சின்ன தோல்விகள் கிடைக்கும் அவ்வளவுதான்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வரும். எப்போதுமே எரிச்சலோடு இருப்பீர்கள். வேலையில் கவனம் இருக்காது. தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரும். பிரச்சனைகள் வரும். புதிய முதலீட்டை இன்று செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தெரியாத மூன்றாவது நபரோடு பழக்கவழக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள். அன்றாட வேலையில் கூடுதல் கவனத்தோடு இருந்தாலே இன்றைக்கான நாள் நல்லபடியாக செல்லும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வேலை செய்யும் இடத்தில் நண்பர்கள் கூட எதிரியாக மாறலாம். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் உங்களை நிறைய பேர் ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படக் கூடாது. நின்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மனதை அமைதியாக வைக்க இறைவழிபாடு செய்யவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குழந்தைகளின் உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை காட்டவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். கையில் இருக்கும் பணத்தை சரியாக செலவு செய்ய வேண்டும். அனாவசிய செலவு குறைத்துக் கொண்டால் மட்டும்தான் உங்களுடைய நாள் நிம்மதியாக இருக்கும். யாரை நம்பியும் குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லாதீங்க. வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் செய்யாதீங்க. விட்டுக்கொடுத்து நடப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது. புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top