இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமாக இந்த நாள் துவங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். கடுமையான வார்த்தைகளை பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையையும் கொஞ்சம் முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும். தாமதத்தால் வேலையில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி, தொழில் சம்பந்தப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி, உங்களுடைய சொந்த வேலையாக இருந்தாலும் சரி நேரத்தை கடைபிடிப்பது இன்று நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அவசரம் இருக்கும். எதிலும் பொறுமை இருக்காது. அவசரப்படுவதால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் அந்த பிரச்சனையை உங்களது புத்திசாலித்தனத்தால் சரி செய்து விடுவீர்கள். எதிலும் பொறுமையாக இருங்கள் பொறுமையாக பேசுங்கள் அடுத்தவர்களுடைய வார்த்தைகளுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்கள் இன்று உங்களுடைய வேலையை முடிப்பதற்கு அயராது உழைப்பீர்கள். கொஞ்சம் உடம்பு வலி இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடமைகளில் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள். மன தைரியம் அதிகமாக இருக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாள். வெற்றி காணக்கூடிய நாள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். எதிலும் பதட்டத்தோடு இருப்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கைத் துணையோடு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இரட்டிப்பு வேலை உங்கள் தலைமேல் பாரமாக நிற்கும். சில பேருக்கு டென்ஷன் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் இருக்கும் டென்ஷனை கோபத்தை குடும்பத்தில் காட்டக் கூடாது. வேளையில் நடக்கும் பிரச்சனையை, வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டால் தான் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் பார்த்துக்கோங்க.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நலம் ஆக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் கூட, புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். மன நிம்மதி அடையக்கூடிய நாள். நிதி நிலைமை சீராகும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த வேலை நடக்காது. இதனால் உடல் சோர்வு மனசோர்வு ஏற்படும். வேலையில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவீங்க. குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தடைப்பட்டு வந்த சுப காரியம் பேச்சுகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசரப்பட்டு எதுவும் பேசக்கூடாது. அவசரப்பட்டு வேலையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இன்று மோசமாக இருக்கக்கூடிய சூழ்நிலை நாளை நல்லபடியாக மாறலாம். இன்று நல்லபடியாக இருக்கக்கூடிய சூழ்நிலை நாளை மோசமாக மாறலாம். ஆகவே பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் புரிதலும் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று திறமையோடு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் எல்லா பிரச்சனைகளையும் சுலபமாக சரி செய்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையும். கமிஷன் தொழில் லாபம் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். யார் உங்களை தோற்கடிக்க நினைத்தாலும் அது நடக்காது. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வீர்கள். தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். பொறாமை குணத்தோடு உங்களிடம் நெருங்குபவர்களுக்குத்தான் பிரச்சனை. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தொலைதூரப் பயணத்தின் மூலம் கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேலதிகாரிகளின் தொல்லையை கொஞ்சம் சகித்து செல்ல வேண்டும். முன்கோபடக்கூடாது. புது வேலை கிடைப்பது குதிரை கொம்பு. இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள் நிதி நிலைமை சீராகும். வருமானம் பெருகும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top