இன்றைய ராசிபலன் – 31 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 31 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டாலும் வேலையில் பின்னடைவு ஏற்படும். பிறகு இந்த நாள் முடியும் சமயத்தில் ஏகப்பட்ட டென்ஷன் வந்துவிடும். இந்த நேரத்திற்குள், இந்த வேலையை முடிக்க வேண்டும் என்ற டார்கெட் வைத்து வேலை செய்தால் பிரச்சனை இருக்காது. புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கவும். உங்களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன் கோபம் வரும். எல்லா வேலையிலும் அவசரப்படுவீர்கள். எல்லா விஷயத்திலும் உங்களுக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் நினைப்பீர்கள். இதனால் நிறைய ஏமாற்றங்கள் ஏற்படும். சின்ன சின்ன பிரச்சனைகளால், பெரிய பின் விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. எல்லா விஷயத்திலும் கவனத்தோடு இருங்க பொறுமையாக இருந்தால், வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். அனுபவ சாலிகளின் ஆலோசனையை செவி கொடுத்து கேட்கவும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அவசரப்பட மாட்டீங்க. பொறுமையாக சிந்தித்து செயல்படுவதால் பிரச்சனைகள் இல்லை. வேலை செய்யும் இடத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அந்த பிரச்சனை எல்லாம் இன்றோடு முடிந்து விடும். நிதி நிலைமை ஏறக்குறைய இருக்கும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியடைய கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் படிப்படியாக சரி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்போடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழிலிலும் பெருசாக பிரச்சனை இருக்காது. ஆனால் உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மாமியார் வழி உறவுகள் மூலம் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுவீர்கள். எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்று சரியாக அடையாளம் காணுவீர்கள். இதனால் எதிர் காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பீர்கள். உடல் அசதி ஏற்படும். மருத்துவ செலவு உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். சீக்கிரம் செரிமானம் ஆகாத பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. எல்லா வேலையையும் நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். இதனால் நாளைக்கான வேலைகளும் அதிகரிக்க தான் செய்யும். கொஞ்சம் சிரமப்பட்டு இன்றைக்கான வேலையை இன்றே முடிக்க முயற்சி செய்யுங்கள். ஊர்வம்பு பேசுவது, கதை பேசுவது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டாதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து முடிப்பீர்கள். எறும்பு போல சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பீர்கள். இதனால் இன்று உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. செலவை குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவு எதிர்காலத்தில் பிரச்சனையை கொடுத்து விடும். முன்பின் தெரியாத நபரை நம்பி உங்கள் சொந்த விஷயத்தை பகிர வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் கோபத்தோடு இருப்பீர்கள். யாராவது விளையாட்டாக சில விஷயங்களை பேசினாலும் உடனே திட்டி விடுவீர்கள். இதனால் பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல நண்பர்கள் உறவுகளையும் இழக்க வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். வாக்குவாதம் செய்ய வேண்டாம் அனுசரித்து செல்லவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களால் பிரச்சனைகள் வரும். இருந்தாலும் அதையெல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். இதனால் பெரிய அளவில் இன்று பிரச்சனைகள் வராது. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசு கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொழில் இவைகளில் ஏமாற வாய்ப்புகள் இருக்கிறது. சொந்தமாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு அளவுக்கு மேல் அவர்களை முழுமையாக நம்பாதீங்க. உங்களுடைய உடைமைகள் உங்களுடைய பொருட்களை நீங்கள்தான் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாத நட்பு வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். முக்கியமான வேலைகளை உங்களை நம்பி ஒப்படைப்பாங்க. அதை சரிவர செய்து முடிக்கவும். சோம்பேறித்தனம் வேண்டாம். மேலதிகாரிகளிடம் பொய் சொல்ல வேண்டாம். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்ல வேண்டாம். உண்மையை சொல்லி மனசு விட்டு பேசினால் அன்றோடு பிரச்சனை முடிந்து விடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கிய குறைபாடு தரும் உணவினை சாப்பிடாதீங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top