ஜூன் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் மாதமாக திகழப்போகிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதில் சிறிது சிரமங்கள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கை பிறக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகரிக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் நடுப்பகுதியில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்குரிய வழிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் வீண் விரயங்களை தவிர்ப்பது நன்மையை தரும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
வேலையைப் பொருத்தவரை மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் கவனம் தேவை. வேலை தொடர்பாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சவாலான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாக இருக்கும். இருப்பினும் அந்த வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலமே உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டையும் சலுகைகளையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். எனினும் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் தடைகள் உண்டாக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விவேகத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுப காரிய பேச்சுகள் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலையை சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளும் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் காரிய வெற்றி ஏற்படும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்சினைகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். மேலும் யாரையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறமையாக செய்து முடித்து விரும்பிய இடம் மாற்றத்தை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் கவனத்துடன் எடுக்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ராமபிரானை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புத்தி கூர்மையுடன் செயலாற்றும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். கோவத்தை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்காக கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அமைதியுடன் செயல்பட வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உடல் நலனில் அலட்சியமாக இல்லாமல் சிறிய உபாதையாக இருந்தாலும் உடனே உரிய மருத்துவரை அணுக வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் வேலையில் நல்ல மாற்றத்தை உணர முடியும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் சற்று காலதாமதமாக கிடைக்கும். கவனக்குறைவால் தொழிலில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் ஏற்ற இறக்கம் தென்படும். மருத்துவர் ரீதியாக செலவுகள் உண்டாகும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினரிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். சிறு தவறுகளால் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். இருப்பினும் உடன் இருப்பவர்களை முழுமையாக நம்பாமல் தானே முடிவை எடுப்பது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சவால்களை சந்திக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும், பண விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் விரைவில் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக எந்தவித முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நாகதேவர்களை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படக்கூடும். அதனால் கடன் சுமை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வருமானத்தை அதிகரிப்பதில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மன தைரியம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். கடின உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏமாற்றங்களை சந்திக்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வரவை விட செலவுகள் குறைவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வீண் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நடராஜ பெருமாளை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் வெற்றியடையும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் சூழ்நிலை உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையை திறம்பட பொறுமையுடன் செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக தீர ஆலோசித்து எடுப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அர்த்தநாரீஸ்வரரை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top