மே மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். கனவுகள் நினைவாகும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கை சேரும். சொத்துக்கள் வாங்குவதற்குரிய யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை திறமையை நிரூபிக்கும் மாதமாக இந்த மாதம் திகழும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். இதனால் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் மாதமாக திகழப்போகிறது. எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அறிவுபூர்வமாக செயலாற்ற வேண்டும். பொருளாதாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை தள்ளி வைப்பது நல்லது. புதிய தொழிலை தொடங்குவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப் போகிறது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள். இருப்பினும் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிதாக எந்த தொழிலிலும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக திகழப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட வருமானம் அதிக அளவில் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
வேலையை பொருத்தவரை உடன் பணி புரிபவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். முந்தைய காலங்களில் செய்த முயற்சிகளுக்கு இந்த மாதம் நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வளர்ச்சி மிகுந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். புதிதாக எந்த பொருளையும் வாங்காமல் தள்ளி போடுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக ஆலோசனை பெற்ற பிறகு எடுப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்காக எந்தவித முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் மாதமாகவும் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளில் இருந்து விடுபடும் மாதமாகவும் வெற்றிகள் பெரும் மாதமாகவும் திகழும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. கடன் சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சுப செலவுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை ஒரு சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. வேலை நிமிர்த்தமாக திடீர் பயணங்களை சந்திக்கலாம். அலுவலகத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை தொழிலில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சில தடைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். இருப்பினும் எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். திருமணத்திற்காக முயற்சி செய்பவர்கள் தங்களுடைய தீவிர தேடுதலின் அடிப்படையிலேயே நல்ல வரன் கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதில் அனைத்து முயற்சிகளையும் செலுத்தி செம்மையாக அந்த வேலையை செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஏற்பட்டாலும் புதிதாக தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் செலவுகள் அதிகம் இருக்கும். தொழில் ரீதியாக எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவும் தக்க ஆலோசனை பெற்று எடுப்பது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பொறுமையை கடைப்பிடித்து செயலாற்றுவதன் மூலம் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலர் வாங்கிய கடனை அடைக்க முயற்சி செய்வார்கள்.
வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். இது நாள் வரை செய்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக திகழப்போகிறது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மாற்றங்கள் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் சேமிப்புகள் குறைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை கூட உண்டாக வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையும் நிதானத்தையும் கையாள வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றகரமான வாய்ப்புகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்து நீங்கும். இருப்பினும் வேலை மாற்றம் செய்வதை தவிர்த்து விட்டு இருக்கும் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த மாதத்தில் எந்தவித முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. குடும்ப ரீதியாக சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகளவு பண வரவு ஏற்படும். அதனால் சேமிப்பும் உயரும். உடல் ரீதியாக இதுவரை இருந்து வந்த உபாதைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலை பொருத்தவரை நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஐயப்பனை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். மேலும் பணத்தை சேமித்து வைக்கும் முயற்சி செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் சிலருக்கு யோகம் உண்டாக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை சாதகம் அற்ற சூழ்நிலையே நிலவுகிறது. தவறான புரிதல்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் பிரச்சனைகளும் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் வேலையில் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் இருக்க முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு புதிய திட்டங்களை தீட்டி அதை செயலாற்றி அதில் வெற்றியும் பெறுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதை தன்னம்பிக்கையுடன் சந்தித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக அளவில் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும். பண வரவு தாராளமாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் பணத்தை சேமிக்க இயலாத சூழ்நிலை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். கடின உழைப்பால் தான் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. சற்று மந்தமான சூழ்நிலையே உண்டாகும். தொழிலில் அதிக அளவு போட்டிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top