வைகாசி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொட்டது தொடங்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதனால் உயர் பதவி கிடைப்பதற்கு சம்பள உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தொழிலை முன்னேற்றுவதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆதாயம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். அதே சமயம் விரையங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இதில் பெரும்பாலும் சுப விரயம் ஏற்படும் சூழ்நிலையே உண்டாகும். இதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த பதட்ட நிலை மாறி தீர்க்கமான முடிவு எடுத்து செயலாற்றுவீர்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி எந்த வேலையும் தராமல் இருப்பது வேலையில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ள உதவும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நந்தி பகவானை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உன்னதமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். புதிதாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை முன்னேற்றுவதற்கும் சொந்த இடத்திற்கு தொழிலை மாற்றுவதற்கும் சிறந்த மாதமாக இந்த மாதம் திகழும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வராகி அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். புதிதாக இடம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். சற்று கவனத்துடன் வேலையை செய்வதன் மூலம் வேலையில் எந்த வித பிரச்சனைகளும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலை முன்னேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு அந்த முயற்சியில் வெற்றியும் பெறுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படாது. வரவை மிஞ்சிய செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் முற்பகுதியை தலைகீழாக மாற்றும் அளவிற்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாக்கும்.
வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை பற்றும் வரவும் சரிசமமாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகளை தக்க நபர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு எடுப்பது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நடராஜரை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். அதிகப்படியாக பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சனைகள் சிறிது நேரத்திலேயே சரியாகி சாதகமான சூழ்நிலையை உண்டு பண்ணும். இருப்பினும் தினமும் பிரச்சனை வருகிறது என்று யோசித்து நிம்மதி இழந்து காண்பீர்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்புவதால் பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும் என்றாலும் அந்த லாபத்தை பயன்படுத்தி தொழிலை அடுத்த கட்ட நிலைக்கு மாற்ற உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். திருமண தடை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு விரைவிலேயே திருமணம் கைகூடும். சுப காரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். வேலையை திறம்பட செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவது சற்று சிரமமாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தொய்வு நிலை மாறி நல்ல முன்னேற்றகரமான தொழில் அமையும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். தொட்டதெல்லாம் துலங்கும். இதுவரை தடைப்பட்டிருந்த அனைத்து நற்செயல்களும் படிப்படியாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். புதிதாக வீடு மனை வண்டி வாகனம் சொத்து போன்றவை வாங்குவதற்குரிய யோகமும் ஒரு சிலருக்கு ஏற்படும்.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை செய்வதற்குரிய உத்வேகம் ஏற்படும். அதில் வெற்றியும் காண்பீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாகவே இருக்கும். விரயங்கள் அதிக அளவில் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ண நோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களிடமும் உடன்பிறந்தவர்களிடமும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பாத இடத்திற்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வேலையை விட்டு விடலாமா என்று எண்ணமும் ஏற்படும். எந்த முடிவையும் இந்த மாதம் எடுக்காமல் தள்ளி வைப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும். தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு சில முட்டுக்கட்டைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு அவர்களுடைய பழைய கடன்களை திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும். தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் படிப்படியாக நடைபெறும்.
வேலையை பொருத்தவரை புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் ஏற்படும். புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் சிறந்த மாதம் திகழும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட இரண்டு மடங்கு செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. ஆரோக்கிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை அற்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விட்டு கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பப் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். என்னதான் கடினமாக வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சிரமமாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உழைப்பிற்கேற்ற லாபமே கிடைக்கும். சென்ற மாதத்தில் இருந்த தொழில் தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வைத்தீஸ்வரரை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவர்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்தவர்களும் தொழிலை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானே வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top