வைகாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

வைகாசி மாத ராசி பலன் 2025 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Qries


மேஷம்மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை இந்த வைகாசி மாதம் லாபகரமான மாதமாக இருக்கப் போகிறது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். எதிர்பார்த்ததை விட நல்ல லாபங்கள் வந்து குவியும். வேலையிலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றால் அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தான். இந்த மாதம் முழுவதும் உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் திருச்செந்தூர் முருகனை கும்பிடுங்கள் நன்மை நடக்கும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாத துவக்கத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆகவே நல்ல விஷயங்கள் ஏதாவது இருந்தால் வைகாசி மாதம் 15 தேதிக்குள் நடத்தி முடித்து விடுங்கள். இந்த மாதத்தின் பிற்பகுதியில் சில பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். மாத பிற்பகுதியில் மந்தமான போக்கு உண்டாகும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் உடனடியாக வெற்றி கிடைக்காது. மற்றபடி பயப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் கூட நல்லபடியாக அமையும். தினமும் சிவன் வழிபாடு நன்மையை செய்யும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உயர்வு வரக்கூடிய மாதமாக இருக்கும். ஆமாங்க வாழ்க்கையில் கீழே இருக்கிறவங்க, கூட படிப்படியாக செல்வ நிலைகளும், கல்வியிலும், வியாபாரத்திலும், அந்தஸ்திலும் உயர்ந்த இடத்திற்கு செல்ல போகிறீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயமாக கிடைக்கும். விடாது முயற்சி செய்ய வேண்டும். வருமானம் உயர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தலைகனம் இல்லாமல் வரும் வாய்ப்புகளை பணிவோடு ஏற்றுக்கொண்டு முயற்சிகளை மேற்கொண்டால் இந்த மாதம் பெரிய சாகசம் செய்யலாம். தினமும் நந்தி தேவரை கும்பிடுங்கள். நல்லது நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் கொஞ்சம் சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். சோம்பேறித்தனத்தை தூர வைக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்காமல் வேலை செய்பவர்கள், வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொருளாதார நிலை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். எதிர்பார்த்த பணம் கையை வந்து சேராது. குடும்பத்தில் அனுசரணை தேவை. கணவன் மனைவி விட்டுக் கொடுத்த நடக்க வேண்டும். தினமும் ஏதாவது ஒரு அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தேவையற்ற மன குழப்பங்கள் இருக்கும். முடிவு எடுப்பதில் தெளிவு இருக்காது. அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். குழப்ப நிலையில் இருக்கும் போது, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி சண்டை போட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளோடு அனுசரணையாக பேச வேண்டும். வியாபாரத்தில் பார்ட்னரோடு சண்டை சலசலப்பு கூடவே கூடாது. விட்டுக் கொடுத்து நடக்கவும். இந்த மாதம் நன்மை நடக்கும். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.கன்னிகன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த மாதம் நிதிநிலைமை சீராக தான் இருக்கும். வேலையும் வியாபாரமும் நினைத்தபடி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலையில் சில பேருக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு இடமாற்றத்தோடு சேர்ந்து ப்ரமோஷனும் கிடைக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு முடிவு எடுப்பதில் சிரமம் இருக்கும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் கொஞ்சம் சிரமத்தையும், கொஞ்சம் விரைய செலவையும் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தினமும் குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய வாரமாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளோடு போட்டி போட்டு ஜெயிப்பீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சவால் விட்டு பேசி சமாளித்து, அந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளுக்கும் தோள் கொடுத்து துயரங்களை துடைக்க முன் நிற்பீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். இந்த மாதம் நிறைய நல்லது நடக்கக்கூடிய மாதம். புது மனிதர்களை சந்திக்கும் போது மட்டும் கவனத்தோடு இருக்கவும். தினமும் அனுமனை கும்பிடுங்கள் நன்மை நடக்கும்.விருச்சிகம்உங்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கேட்காமலேயே கிடைக்கும். நீங்கள் ஒரு உயர்ந்த பதவியில் அமர்ந்து நாலு பேரை அடக்கி ஆளக்கூடிய தகுதியை பெறுவீர்கள். தலைக்கனம் ஒருபோதும் எட்டிப் பார்க்கக் கூடாது. உயர்ந்த பொறுப்புகளை கையில் வாங்கும் போது, பணிவு அடக்கம் மிக மிக தேவை. அதை நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உறவினர்களால் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. வாங்கிய கடனை அடைக்க உண்டான வழியை தேடுங்கள். இல்லை என்றால் அதுவும் சில சங்கடங்களை உண்டு பண்ணிவிடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டாம். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை தரும்.தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் அயராது உழைப்பீர்கள். வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள போராடுவீர்கள். உங்களுடைய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இறைவன் உங்களுக்கு துணையாக நிற்பான். இருந்தபோதிலும் பெரிய அளவில் முதலீடு செய்யும் போது, பண வர்த்தனை பரிவர்த்தனையின் போது நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாராகி அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்ல வழியை காட்டும்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சின்ன தடுமாற்றம் இருக்கும். எந்த ஒரு செயலையும் சரியாக செய்து முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற சகவாசத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையின் பாதை மாறலாம். தேவையற்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகிடாதீங்க. உஷார் விஷால். அரசுக்கு புறம்பாக எந்த காரியத்திலும் ஈடுபடாதீர்கள். சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைக்காதீர்கள். நேர்மையாக நடந்து கொண்டால், இந்த மாதம் எந்த பிரச்சனையும் இல்லை. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். குறிப்பாக இளைஞர்கள் பெற்றவர்களின் அரவணைப்பில் இருப்பது நல்லது. தினமும் நரசிம்மர் வழிபாடு செய்வது சிறப்பு.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொருளாதார ரீதியாக நிறைய நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புது புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீட்டுக்கு வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையில் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளின் பேச்சை தட்ட வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையோடு சண்டை போடக்கூடாது. குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தினமும் முருகரைக் கும்பிட நன்மை நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்ன தான் பணம் காசு நிம்மதி இருந்தாலும், உங்களுக்கு இந்த ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தொடர்கதையாக இருக்கும். வீண்விரைய செலவுகள், மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. வேறு வழியே கிடையாது. இந்த சூழ்நிலையில் இருந்து நீங்கள் கஷ்டப்பட்டு கடந்து வந்தே ஆக வேண்டும். மனதை தளர விட வேண்டாம். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். மேல் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். நன்மையே நடக்கும். விநாயகரை கும்பிட்டால் நன்மை நடக்கும்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top