இந்த வார ராசிபலன் 06/05/2024 முதல் 12/05/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு பிரச்சனை என்றாலும் உடனே அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நபரால் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் இருப்பவர்களுடன் பொறுமையாக பேசுவதன் மூலம் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் வேலையை சுலபமாக்கிக் கொள்ள முடியும். இருப்பினும் வேலையில் கவனம் அதிகமாக செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற குழப்பங்கள் வரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு கரையும் சூழ்நிலை உண்டாகும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற குழப்பங்களால் குடும்பத்தில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாக்கும்.
வேலையை பொருத்தவரை உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கிடைக்கும் வாரமாக திகழும். சாமர்த்தியமாக யோசித்து எடுக்கும் முடிவுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். அதனால் சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை உற்சாகத்துடன் செய்வீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற உதவும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதாரண வாரமாக தான் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகளவு வருமானம் ஏற்படும். இருப்பினும் கடன் விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். ஒரு சிலருக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் எந்தவித வேலையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை கடந்த நாட்களில் இருந்ததை விட பணவரவு அதிகமாக ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
வேலை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். தொழிலில் இருக்கக்கூடிய போட்டிகளை சமாளிப்பதற்காக சிரமப்பட வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். புதிதாக எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கு இணையான செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடன் இருப்பவர்களுடன் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். கவனத்துடன் செய்வதன் மூலம் வேலையில் தேவையற்ற பிரச்சினைகள் வருவதை தவிர்த்துக் கொள்ள முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது .பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்தை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை புதிய வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு மன அழுத்தத்தால் வேலை பாதிக்கும் சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்கு சிறிது காலதாமதம் ஆகும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. ஒரு சிலரது இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலை விரிவு படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரம் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய கடன்களை அடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரத்தில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவது குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் அனுசரனையால் சிறப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக அமையும்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றவும் விரிவு படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top