இந்த வார ராசிபலன் 13/05/2024 முதல் 19/05/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். கோவப்படுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். வேலையில் நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இந்த வாரம் ஏற்ற வாரமாக இல்லை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகள் ஏற்படும். உடல் நலம் சீராக இருந்தாலும் மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த விஷயத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
வேலையை பொருத்தவரை சற்று சோர்வான நிலையே ஏற்படும். இருப்பினும் முடிந்த அளவிற்கு உற்சாகத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று போராட வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அதனால் புதிய தொடர்புகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்கு சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஒரு சிலருக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். முதலீடுகள் செய்யும் பொழுது தக்க நபரிடம் ஆலோசனை பெற்று செய்தால் அதில் நல்ல பலனை பெற முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண்விரயங்கள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட வேலையை திட்டமிட்ட நேரத்தில் முடித்து அதனால் பல நன்மைகளை பெறுவீர்கள். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் உடன் இருப்பவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாக இருக்கும். வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலை முன்னேற்றுவதற்குரிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத திடீர் பணவரவிற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு எடுத்துச் செல்வதற்குரிய முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண்விரயங்கள் எதுவும் ஏற்படாது. உடல்நலம் சீராக இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக உடன் இருப்பவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நன்மையைத் தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருந்தாலும் அதை திறமையாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதோடு மட்டுமல்லாமல் விரும்பிய சலுகைகளும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். ஒரு சிலருக்கு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டாகும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அவசரப்படாமல் நிதானத்துடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நன்மையை தரும். அதை மீறி தானே முடிவுகளை எடுப்பதால் பிரச்சனைகள் உண்டாவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பை பெற்று அதன்மூலம் வேலையை செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது நன்மையை தரும். அதையும் மீறி செய்வதாக இருக்கும் பட்சத்தில் உரிய ஆலோசனை பெற்று செய்வது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் விரையங்களால் செலவுகள் அதிகரிக்கும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வீண் விரயங்களை தடுப்பதற்கு சுப விரயங்களாக மாற்றிக் கொள்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாக இருந்தாலும் அதை கவனத்துடன் செய்து முடித்தால்தான் உயர் அதிகாரிகளின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் கவனம் தேவை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். பயணங்களின் காரணமாக உடல் சோர்வாக காணப்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் பெரிய வேலைகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பான காலமாக இந்த காலம் திகழும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய முன்னேற்றத்தை காண்பீர்கள். பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகளும் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவிற்கு உரிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை நம்பாமல் தானே அந்த வேலையை எடுத்து செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஏற்பட்டாலும் தொழிலில் மறைமுக எதிரிகளால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பாக தக்க ஆலோசனை பெற்று எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு அதிகமாகவே ஏற்படும். இதுவரை இருந்து வந்த கடன் சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் மூத்தவர்களின் சொல் கேட்டு நடப்பது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலையில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரும்பிய வேலை கிடைக்கவும் வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் அடைவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக மன குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இந்த வாரம் அந்த குழப்பம் தீருவதற்குரிய நல்ல செய்தி வந்து சேரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அந்த வேலையை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top