இந்த வார ராசிபலன் 27/05/2024 முதல் 02/06/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்செய்திகள் வந்து சேரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்தபடி பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சேமிப்பு உயரும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும். பிரிந்து இருந்த உறவுகள் ஒன்று சேருவர்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை சிறப்பாக செய்ய முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கவலைகள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை சொந்த இடத்திற்கு மாற்றுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பண வரவும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலனில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. சிறு கவனக்குறைவும் பெரிய பிரச்சினையை ஏற்படக்கூடும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இருப்பினும் தங்கள் வேலையில் கவனத்துடன் செயல் பட்டால் பிரச்சினைகள் வராது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் உடன் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் மிகுந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனங்களை மாற்றும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை மிகுந்த கவனத்துடன் வேலையை செய்ய வேண்டும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது, உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். இருப்பினும் உடன் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருந்தாலும் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கனவுகளை நினைவாக்குவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிரமப்பட்டு தான் எதையும் சாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மறைமுக எதிரிகளும் ஏற்படுவார்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதைவிட அதிகமான அளவு செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பமும் சோர்வும் உண்டாகும். வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். இல்லையேல் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சிரமமான வாரமாகவே திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. இருப்பினும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிதாக எந்த முயற்சியிலும் இந்த வாரம் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி தங்கள் வேலையை செய்வதன் மூலம் சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கடுமையான போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடன் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது நல்லது. யார் பேச்சையும் கேட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு போதுமான அளவு ஏற்படும். செலவுகள் அதிகமானாலும் அதை சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும். வீண் மனஸ்தாபம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பேசும்பொழுது கவனமாக பேச வேண்டும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு எதிர்கால திட்டத்தை நினைத்து கவலைப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையின் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். வெற்றிகள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படுவதில் தாமதங்கள் ஏற்படும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியை தருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு வார இறுதியில் ஏற்படும். உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது நன்றாக ஆலோசித்து பிறகு எடுப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். செல்வாக்கு மிகுந்த நபர்களின் உதவியால் தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்துவது முக்கியம். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. இருப்பினும் செலவுகளை சமாளித்து கொள்ளலாம். தொழிலை முன்னேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்திலும், உடல் ரீதியாகவும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் அடைவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். தனித்து வேலையை செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள். ஒரு சிலருக்கு இதனால் பதிவு உயர்வு கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top