இந்த வார ராசிபலன் 29/04/2024 முதல் 05/05/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமூகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வரவை விட செலவுகள் அதிகமாக ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உடைமைகளில் கவனம் தேவை. முக்கியமான எந்த முடிவையும் எடுக்கும் பொழுது பொறுமையை கையாளுவது மிகவும் அவசியம்.
வேலையைப் பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று குறைவாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் அதிக அளவு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் நீங்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியை உண்டாகும். வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
பதவி உயர்விற்காகவும், சம்பள உயர்விற்காகவும் காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல லாபம் ஏற்படும். அதனால் தொழிலை நல்ல முன்னேற்ற நிலைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு வீண்விரயங்களால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றியை தரும்.
வேலையை பொருத்தவரை திறமையை வெளிப்படுத்தும் வாரமாக திகழ்கிறது. உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். குடும்பத்தாருடன் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். வாக்குவாதங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். எவ்வளவுதான் வேலையை திறமையாக செய்து முடித்தாலும் நல்ல பெயர் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகளோ, சலுகைகளோ கிடைப்பது தாமதமாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக எந்த முடிவுகளையும் இந்த வாரம் எடுக்காமல் இருப்பது நல்லது. பேச்சுவார்த்தைகளை கூட தள்ளி வைப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை செலவுக்கு ஏற்ற வரவு ஏற்படும். செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு தேவையான பண வரவு கிடைக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை ஏற்படும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களின் வருகையால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் பொறுமையை விடாமல் நிதானத்துடன் செயலாற்ற வேண்டும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கவனம் தேவை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் அதிகம் ஏற்படாது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது தக்க ஆலோசனையை பெறுவது நல்லது.
அலுவலகத்தில் கௌரவம் உயரும். ஆதரவு கிடைக்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப் போகிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமாக நடைபெறும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வயதில் மூத்தவரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை எதிர் பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்படும். தொழிலை பொருத்தவரை அதிகளவு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக திகழும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களிடையே தேவையில்லாத பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது கவனம் தேவை. ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் தொழிலில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எப்பொழுதும் போல் லாபகரமாகவே செயல்படும். தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். முயற்சிக்கு ஏற்ற தேவையான உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவுகளும் நட்புகளும் விரும்பி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டையும் பதவி உயர்வையும் பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். இதனால் தொழில் ரீதியாக வாங்கிய கடன்களை தீர்க்க முயல்வீர்கள். தொழிலை மேலும் விரிவு படுத்த தேவையான உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை எதிர்பாராத இடமாற்றம் பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். தொழிலைப் பொருத்தவரை தொழில் ரீதியாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒரு சுமூகமான சூழ்நிலை உண்டாகும். புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களும் தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும் கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அனுசரித்து செல்வது நல்லது. வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries
Scroll to Top