– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் கூடுதல் முயற்சி தேவை. வெற்றியை அவ்வளவு சுலபமாக இறைவன் உங்களுக்கு கொடுக்க மாட்டான். சில பல தோல்விகள், சில பல அவமானங்களை சந்தித்த பின்பு உங்களுக்கான வெற்றி உங்கள் கையை வந்து சேரும். நிறைய நல்ல அனுபவங்களும், கெட்ட அனுபவங்களும் கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். கெடுதல் நடந்த உடன் சோர்ந்து போய் உட்கார கூடாது. கெடுதல் எதனால் நடந்தது என்று யோசித்து அதை சரி செய்து கொள்ளுங்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் இருக்கும் டென்ஷன் காரணமாக சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் அனுமன் வழிபாடு உங்களுக்கு மன தைரியத்தை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் ப்ரீ பிளான் ரொம்ப ரொம்ப முக்கியம். எதையும் பிளான் பண்ணாம பண்ணவே கூடாது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக்கூடாது. முன்பின் தெரியாத நபர் பேச்சைக் கேட்டு புதிய முதலீடுகள் செய்யவே கூடாது. எல்லா விஷயத்திலும் கவனம் இருக்கட்டும். அனுபவ சாலிகளையும், நம்பிக்கையின் பேரில் உள்ளவர்களையும் மட்டும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை வரலாம். தாய்மாமன் உறவோடு சிக்கல்கள் வரலாம். ஜாக்கிரதையாக இருங்கள். அனுசரித்துச் செல்லுங்கள். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு இந்த வாரம் நன்மையை செய்யும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற டென்ஷனும் தேவையற்ற உடல் உபாதைகளும் வரக்கூடிய வாரமாக இருக்கும். உடனடியாக பயந்து விடக்கூடாது. டென்ஷன் எதனால் வரும், உங்களுடைய கடமைகளை சரியான நேரத்தில் செய்யாததன் மூலம் வரக்கூடியது டென்ஷன். உடல் பாதைகள் எதனால் வரும். ஆரோக்கியமான உணவை சாப்பிடாமல் இருந்தால், நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் உடல் உபாதைகள் வரும். ஆக இந்த இரண்டு விஷயத்தையும் சரி செய்து கொள்ளுங்கள். டென்ஷனை நிச்சயம் குறைக்க முடியும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். வேலையை செய்யும் போது முழு கவனத்தோடு செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம் தினம் தோறும் விநாயகர் வழிபாடு இந்த வாரம் உங்களுக்கான நல்லதை செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் பிளான் எல்லாம் பக்காவாகத்தான் போடுவீர்கள். ஆனால் அதை நிறைவேற்றுவதில் தான் சிக்கல். கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது ஓய்வு எடுக்கலாம், பாட்டு கேட்கலாம், என்று நேரத்தை செலவு செய்து விட்டு, கடைசியின் நேரத்தில் வேலையை முடிக்காமல், முட்டி மோதி நிற்கக்கூடிய நிலைமை உங்களுக்கு உண்டாகும். கடந்த நாட்களாகவும் இதே தவறை தான் நீங்கள் செய்திருப்பீர்கள். இனிமேல் அந்த தவறை செய்யாதீங்க. முதலில் கடமையை முடித்துவிட்டு, பிறகு பொழுதுபோக்கை வைத்துக் கொள்ளுங்கள். காலம் பொன் போன்றது. மீண்டும் திரும்பாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் திறமைகள் வெளிப்படக்கூடிய வாரமாக இருக்கும். கஷ்டமான வேலைகளை கூட மிக மிக சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கான பாராட்டும் பதவி உயர்வும் தானாக தேடி வரும். வாழ்க்கையில் முன்னேறி அடுத்த இடத்தைப் பிடிப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி அடையும். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய பார்ட்னர்களை சேர்க்கலாம். புதிய முதலீடு செய்யலாம். புதுசாக விளம்பரங்களை அறிமுகப்படுத்தலாம். இப்படி நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கும் பிரமோஷன், இடம் மாற்றத்தோடு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. நிறைய கண் திருஷ்டி விழும். நல்லதை அனாவசியமாக வெளியில் சொல்ல வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளில் இருந்து விடுபடக் கூடிய வாரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். சில பேருக்கு உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக கவனித்து விடுங்கள். மருத்துவரை அணுக வேண்டும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேராமல் இழுபறியாக இருக்கும். ஒன்றுக்கு, இரண்டு முறை அலைய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தினமும் மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. வீட்டில் மனைவியிடமோ பிள்ளைகளிடமும், முன் கோபத்தை காட்டக் கூடாது. மேலதிகாரிகளிடம் முன்கோபத்தை காட்டக் கூடாது. அனுசரணை தேவை. கடன் வாங்கி இருந்தால் அதை திருப்பி தருவதில் சிரமங்கள் இருக்கும். கடன் கொடுத்தவன் முன்னே போய் நின்று, தைரியமாக பேசுங்கள். ஓடி ஒளிந்து கொள்ள வேண்டாம். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசும் போது பிரச்சனைகள் குறையும். வேலையிலும் தொழிலிலும் கவனம் இருக்கட்டும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை முடிப்பதற்கு உண்டான வழியை தீவிரமாக தேடுங்கள். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நல்லதை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வார துவக்கம் கொஞ்சம் மந்தமாகத்தான் செல்லும். நிறைய வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். அலுவலக வேலை, வீட்டு வேலை வியாபாரத்தில் இருக்கும் வேலை எல்லாவற்றையும் நிலுவையில் வைத்து விடுவீர்கள். பிறகு செய்யலாம், பிறகு செய்யலாம் என்று ஒரு மூட்டை வேலை சேர்ந்து, உங்களை பார்க்கும். எந்த வேலையை முதலில் செய்வது என்று திக்கித் திணற கூடிய சூழ்நிலை உண்டாகும். வார துவக்கத்தில் இருந்தே சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அன்றாட வேலையை அன்றாட முடிப்பவர்களுக்கு இந்த வார இறுதியில் சூப்பரான நல்லது காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு நல்லது வேணுமா, அல்லது தலைமையில் சுமக்கும் பாரம் வேண்டுமா, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தினமும் முருகர் வழிபாடு செய்தால் சோம்பேறித்தனம் உங்களுக்கு அகலும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் போராட்டம் நிறைந்த வாரமாக இருக்கும். நல்ல விஷயங்களை நிறைவேற்ற, நீங்கள் போராடி போராடி வெற்றி அடைவீர்கள். நீங்கள் சொல்ல வந்ததை அடுத்தவர்களுக்கு புரிய வைத்து, உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்துவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். உங்களை சுற்றி இருப்பவர்கள் யாரும் உங்களை புரிந்து கொள்ளாமல் சதி செய்வார்கள். அவ்வளவு தான். ஆனால் நீங்கள் போகும் பாதை சரியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய நிறைய நல்லது நடக்கும். வாரத் துவக்கத்தில் எல்லா நல்லதையும் செய்து விடுங்கள். வார இறுதி நாட்கள் வரை, நல்ல விஷயம் செய்ய காத்திருக்க வேண்டாம். தினமும் அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றியடைய கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் முயற்சி செய்து, நீண்ட நாள் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையை இந்த வாரம் துவங்குங்கள். நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி நல்லபடியாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். கடன் சுமை குறையும். தலைகுனிந்து வாழ்ந்த இடத்தில் தன்னை நிமிர்ந்து வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். அதிக வேலை செய்வதன் மூலமாக சில பேருக்கு உடல் உபாதைகள் இருக்கும். கொஞ்சம் ஓய்வும் தேவை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக் கூடிய வாரமாக இருக்கும். தினம்தோறும் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்தால் மேலும் நன்மைகளை அடையலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். வெற்றி உங்கள் பக்கத்திலேயே இருக்கும். மேற்கொள்ள கூடிய முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். நிதி நிலைமை சீராகும். வீட்டில் மனைவியின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் ஆதரவும் கிடைக்கும். எல்லோரும் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். அதுவே பெரிய சப்போர்ட்டாக இருக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக் கூடிய வாரமாக இருக்கும். வீன் செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க உண்டான வழிகளை மேற்கொள்ளுங்கள். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மீனம்
போராட்டங்களை மட்டுமே பார்த்து பார்த்து, பிரச்சனைகளை மட்டுமே பார்த்து பார்த்து மறுத்துப்போன உங்களுடைய மனதுக்கு ஆறுதல் தரும் வகையில் இந்த வாரம் நன்மைகள் நடக்கும். கவலை படாதீங்க. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அடுத்தவர்களுக்கு அது கண்ணுக்குத் தெரியாது. அதை நினைத்து கவலைப்பட கூடாது. உங்களுடைய வேலையை நேர்மையாக நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும். அதற்கு உண்டான பலனை கடவுள் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பான். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். மனைவியோடு சண்டை போடாதீங்க. வீட்டில் எப்போதும் பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினமும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam