– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய முயற்சிகளை இரு மடங்காக உயர்த்த வேண்டும். எடுத்த எடுப்பிலேயே எந்த விஷயத்திலும் உங்களால் வெற்றி காண முடியாது. அதற்காக சோர்ந்து போகக் கூடாது. விடாமுயற்சியோடு ஒரு வேலையை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும். கூடுமானவரை சொந்தத் தொழிலில் முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வேலையில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான சந்தோஷமான வாரமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பண்டிகையை கொண்டாடுவதற்கு உண்டான அத்தனை வேலைகளையும் செய்ய துவங்கி விடுபீர்கள். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் சப்போட்டும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒலிவும் மறைவும் இருக்கக் கூடாது. ஒப்பந்தம் போடாமல் பண பரிவர்த்தனை செய்யாதீங்க. குறிப்பாக வங்கியில் வேலை செய்பவர்கள், சீட்டு பிடிப்பவர்கள் எல்லாம் இந்த வாரம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றபடி உங்களுடைய வேலை தொழில் எல்லாம் சிறப்பாக நடக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். வெளியிடங்களில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் அயராது உழைப்பீர்கள். அன்றைக்கான வேலையை அன்றே முடித்து விட வேண்டும். ஒரு குறிக்கோளோடு செயல்படுவீர்கள். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சூப்பரான வாரமாக இருக்கப் போகிறது. எந்த ஒரு தடைகளும் வராது. அடுத்தவர்களால் பிரச்சனை வராது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். நீண்ட தூர பயணத்தை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டால் நல்லது நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். அதற்காக பயப்பட வேண்டாம். சிக்கல்களை சமாளிக்கும் தெம்பையும் அந்த கடவுள் உங்களுக்கு கொடுத்து விடுவான். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்பப்போ வர கூடிய பிரச்சனைகளை சமாளிக்க இறைவனின் ஆசீர்வாதம் தேவை. அவ்வளவுதான் தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். நிதி நிலைமை சீராகும். பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். உடல் அசதி நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாட்டை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட உள்ள வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்கள் வேலையில் மூக்கை நுழைக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பிரச்சனை உங்களுக்கு தான். பார்த்துக்கோங்க. தினமும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய முக்கியமான விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில பேருக்கு நீண்ட தூர பயணம் ஏற்படும். வேலை சம்பந்தமாகவோ தொழில் சம்பந்தமாகவோ வெளியூர் செல்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மையை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். அதில் பல நல்ல விஷயங்கள் அடங்கியிருக்கும். சில கெட்ட விஷயங்கள் வரும். அதை கண்டு கவலைப்படக்கூடாது. கெட்ட விஷயங்களை அனுபவங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். நல்லதை வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையிலும் சின்ன சின்ன இடர்பாடுகள் வரும். தடைகள் தாமதங்கள் ஏற்படும். மேலதிகாரிகளுடன் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீங்க, இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் நல்ல வாரமாக இருக்கும். உங்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையில் புது முயற்சிகளை மேற்கொண்டால், அதில் உங்களுக்குத்தான் வெற்றி. தொழிலை விரிவு படுத்த புதிய ஐடியாக்களை அறிமுகப்படுத்தினால், அதிலும் உங்களுக்கு தான் வெற்றி. இப்படி புதுசாக சிந்தித்துக் கொண்டு, புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு இந்த வாரத்தை நகர்த்திச் செல்ல போகிறீர்கள். அறிவாற்றல் பிரகாசமாக கூடிய வாரம் இது. தினமும் மகாலட்சுமி வழிபாடு உங்களுடைய வேலையை இன்னும் மெருகேற்றி தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் வரும். சேமிப்பு கரையும். குடும்பத்தில் இருப்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வாக்குவாதம் வரும். கணவன் மனைவிக்குள் சண்டை வரும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வேளையில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். இடமாற்றம் சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு பதவி மாற்றம் இருக்கும். அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனப்பக்குவம் இருக்காது. மன சஞ்சலத்தோடு தான் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு அமையும். கவலைப்படாதீங்க உங்களுக்கு கிடைத்த வேலையை சிறப்பாக செய்யுங்கள். மற்றதை எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வான். தொழிலிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது நபரை நம்பி கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டாம். பார்ட்னரை கண் மூடி தனமாக நம்ப வேண்டாம். தினமும் பைரவர் வழிபாடு நன்மையை செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வார துவக்கம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருந்தாலும், கொஞ்சம் அலைச்சலோடு இருந்தாலும், வார இறுதியில் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். ஆகவே பாரத் பக்கத்தில் மட்டும் உங்களுடைய வேலைகளில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வார இறுதி நாளில் வேலையை எல்லாம் முடித்துவிட்டு ஜாலியாக நேரத்தை செலவு செய்யலாம். கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் சில பேசிக் கொள்வீர்கள். கூடுமானவரை இந்த வாரம் வாக்கு கொடுக்காதீங்க. ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நல்லதை செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பத்தில் இருந்து தெளிவு கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் நாட்களாக பிரச்சனை கொடுத்திருந்த உங்களுடைய வாழ்க்கை இனி வரக்கூடிய காலகட்டத்தில் பிரச்சனையிலிருந்து விடுபடும். இறைவனின் அருளும் பெரியவர்களின் ஆசிர்வாதமும் ஒரு சேரக் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கையை வந்து சேரும். சமையலறையில் வேலை பார்க்கும் பெண்கள், வண்டி ஓட்டும் ஆண்கள், கொஞ்சம் ரிஸ்க்கான வேலை செய்யக்கூடிய நபர்கள் எல்லாம் இந்த வாரம் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாரம் வாராஹி அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam