இந்த வார ராசிபலன் 29/07/2024 முதல் 04/08/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 29/07/2024 முதல் 04/08/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமற்ற வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் செலவு செலவுகளும் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு காட்டுவார்கள். உடல் நலம் சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் கவனம் தேவை. ஒரு சில நேரங்களில் மனக் குழப்பம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் வாங்கி தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டாவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வசூல் ஆகும். உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதற்குரிய சலுகைகளை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை பெறுவதற்கு கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை தீர்ப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிதாக வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் நல்ல ஆதாயம் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலை ரீதியாக வெளி நாடுகளுக்கு செல்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த அளவிற்க்கு சலுகைகள் கிடைக்காது என்றாலும் ஓரளவுக்கு மனதை சமாதானப்படுத்தும் அளவிற்கு நல்ல செய்திகள் அலுவலகத்தில் நடைபெறும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். திருமண முயற்சிகளை இந்த வாரம் செய்யாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்களின் யோசனைகள் பாராட்டை பெறும். அதனால் சில சலுகைகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்பட சிறிது சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் செய்யும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் இருப்பவர்கள் இந்த வாரம் முயற்சி செய்யலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரித்து செல்ல வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளை இந்த வாரம் செய்யாமல் இருப்பது நல்லது. பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வெளியூர் பயணம் செல்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதிகாரிகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். புதிதாக எந்தவித முதலீட்டையும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. திருமணம் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஒரு சிலருக்கு வசதியான நிலைக்கு போகும் சூழ்நிலை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் ஏற்படும். அதனால் புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதேசமயம் பழைய கடன்களையும் தீர்ப்பதற்கு முயற்சி செய்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி உற்சாகமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வீர்கள். வரவேண்டிய பணத்தை கஷ்டப்பட்டு வாங்கும் சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உற்றார் உறவினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். வேலையை திறம்பட செய்வதன் மூலம் சலுகைகளும் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இல்லையேல் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் வருவதற்கு சற்று சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலையாட்களால் சங்கடங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்களாலும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிக அளவில் இருக்காது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிதாக ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்பட்டாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபரால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் உண்டாகும். கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். வேலையில் கோபப்படாமல் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது மிகவும் முக்கியம். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை தக்க வைத்துக்கொள்ள உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. சேமிப்புகள் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். ஜாமீன் கையெழுத்து போடாமல் இருக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலை சுமை அதிகரித்து அதை சிறப்பாக செய்து முடிப்பதால் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலின் முன்னேற்றத்தை மேம்படுத்த சிறிது கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top