இன்ஸ்டன்ட் பன் தோசை செய்முறை | instant bun dosa seimurai in tamil

இன்ஸ்டன்ட் பன் தோசை செய்முறை | instant bun dosa seimurai in tamil

Qries

– Advertisement –

காலையில் டிபன் செய்ய வேண்டும், இரவு டிபன் செய்ய வேண்டும் என்று குடும்பத் தலைவிகள் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான டிபன் வகைகளை செய்ய வேண்டும் என்றுதான் அவர்களுக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை, நேரம் இன்மை போன்றவற்றின் காரணமாக பலரும் ஒரு முறை மாவை அரைத்து வைத்துவிட்டு தோசை, இட்லி என்று ஊற்றிக்கொண்டு இருப்பார்கள்.
திடீரென்று ஒரு நாள் தோசை மாவு காலியாகிவிடும். அந்த சமயத்தில் மறுபடியும் மாவு அரைக்கவில்லையே என்ன செய்வது என்ற ஒரு பெரிய குழப்பத்திற்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரவையை வைத்து உப்புமா செய்யலாம் என்றால் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்களே என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே ரவையை வைத்து இப்படியும் தோசை செய்து கொடுக்கலாம். அதுவும் சுவையான பன் தோசை செய்து கொடுக்கலாம். அந்த பன் தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்
ரவை – ஒரு கப்பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்தயிர் – 1/4 கப்எண்ணெய் -2 ஸ்பூன்கடுகு – 1/2 ஸ்பூன்சீரகம் – 1/2 ஸ்பூன்உளுந்து – ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்பெருங்காயத்தூள் – 2 சிட்டிகைபச்சை மிளகாய் – 1இஞ்சி – சிறிய துண்டுகருவேப்பிலை – ஒரு கொத்துவெங்காயம் – ஒன்றுகொத்தமல்லி நறுக்கியது – ஒரு கைப்பிடி அளவுஉப்பு – தேவையான அளவுஆப்ப சோடா – 2 சிட்டிகைதண்ணீர் -1/2 கப்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் இரண்டையும் போட வேண்டும். இவை இரண்டும் நன்றாக பொரிந்த உடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் இவற்றை போட்டு உளுந்தும், கடலைப்பருப்பும் சிவக்கும் வரை விட்டுவிட வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து இஞ்சியின் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்குங்கள்.
– Advertisement –

பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தலையை போட்டு இரண்டு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரவை, பச்சரிசி மாவு, தயிர், அரை கப் தண்ணீர் ஊற்றி நைஸ் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த ரவை விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி கழுவி அந்த மாவுடன் ஊற்றி விட வேண்டும். மாவு தண்ணியாக இருக்கக் கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இதனுடன் தேவையான அளவு உப்பு, ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
– Advertisement –

10 நிமிடம் கழித்து இதில் ஆப்ப சோடாவை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்துக் கொள்ளுங்கள். மாவு தண்ணியாகவும் இருக்கக் கூடாது, மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சட்னி தாளிக்கும் கரண்டி என்பது அனைவரின் இல்லங்களிலும் இருக்கும். அந்த கரண்டியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி அல்லது ஒன்றரை கரண்டி மாவை ஊற்றி ஒரு சிறிய தட்டை போட்டு குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.
ஒருபுறம் நன்றாக சிவந்த பிறகு அதை மறுபடியும் திருப்பி போட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து விடுங்கள். இரண்டு புறமும் நன்றாக சிவந்து வெந்த பிறகு அதை அப்படியே எடுத்து வைத்து விடலாம். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு தேங்காய் சட்னி மிகவும் நன்றாக இருக்கும். மிகவும் சுவையான மிருதுவான பன் தோசை தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:சத்து நிறைந்த இன்ஸ்டன்ட் தோசை
எப்பொழுதும் ஒரே போல் ரவையை வைத்து உப்புமா செய்யாமல் தோசை மாவு இல்லாத சமயத்தில் இந்த முறையில் பன் தோசை செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top