ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

Qries

– Advertisement –

வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

ராஜ்மா – 1/2 கிலோ
தக்காளி – 4
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் ராஜ்மாவை 4 மணி நேரம் ஊறவைத்து ஒன்றுக்கு மூன்று என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி எட்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு தண்ணீர் கொதித்ததும் அதில் தக்காளியை நான்காக நறுக்கி போட்டு இரண்டு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகத்தை சேர்க்க வேண்டும். பிறகு சிறிய அளவில் இருக்கக்கூடிய வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், கண்ணாடி பதம் வந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
– Advertisement –

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாடை நீங்கிய பிறகு அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் மேலும் அரைத்து வைத்திருக்கும் தக்காளி, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். மிளகாய் தூளின் பச்சை வாடை நீங்கிய பிறகு நாம் வேக வைத்திருக்கும் ராஜ்மாவை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக கலந்து கொதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை தூவி விட்டு அதற்கு மேல் உருக்கிய உப்பு சேர்க்காத வெண்ணை ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். சுவையான ராஜ்மா மசாலா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே முளைகட்டிய பயறு அடை செய்முறை
மிகவும் எளிதில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய அதிக புரத சத்து நிறைந்த ராஜ்மாவை நாமும் நம்முடைய உணவில் சேர்த்து குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top