வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

Qries

– Advertisement –

உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது.
இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சிறந்த மருந்தாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வெந்தயக் கீரையை நாம் பொரியலாக செய்து தரும்பொழுது அதில் இருக்கக்கூடிய கசப்பு சுவையின் காரணமாக பலரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதற்கு பதிலாக இந்த முறையில் சாதம் செய்து கொடுக்க கசப்பு சுவை அற்று இருப்பதால் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வெந்தயக்கீரை சாதத்தை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – ஒரு கப்
வெந்தயக்கீரை – 3 கட்டு
நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
முந்திரி – 1/2 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
புளி – 50 கிராம்

செய்முறை
முதலில் புளியை 100 எம் எல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஆறு காய்ந்த மிளகாய், சீரகம் போட்டு நன்றாக சிவக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு துருவிய தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து ஆற வைத்து விட வேண்டும்.
இது ஆறியபிறகு இரண்டு டீஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் 4, கடுகு, உளுந்து இவற்றை சேர்க்க வேண்டும். கருவேப்பிலை மற்றும் முந்திரியை அதில் சேர்த்து உளுந்தும் முந்திரியும் சிவக்கும் வரை நன்றாக வறுக்க வேண்டும். நன்றாகவே சிறந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக கண்ணாடி பதம் வரும் வரை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
– Advertisement –

பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் கீரையை அதில் சேர்த்து பச்சை மிளகாயை இரண்டாக கீரி போட்டு அந்த எண்ணெயிலேயே குறைந்த தீயில் வைத்து வேக விட வேண்டும். கீரை நன்றாக வதங்கியதும் இதில் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பொடியையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மேலும் இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து நான்கு நிமிடம் புளியின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
நான்கு நிமிடம் கழித்து நாம் வடித்த சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கசப்பு சுவை வேண்டாம் என்று நினைப்பவர்கள் கீரையை போட்டவுடன் ஒரு அரை டேபிள்ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே மொச்சை பருப்பு சாதம் செய்முறை
பல அற்புத சத்துக்கள் மிகுந்த வெந்தயக் கீரையை அப்படியே செய்து தருவதற்கு பதிலாக இப்படி சாதமாக செய்து தரும்பொழுது அதன் கசப்பு சுவை தெரியாததால் வீட்டில் இருக்கும் அனைவர்கள் அனைவரும் சாப்பிடுவார்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top