சத்தான பச்சை பயிறு குளிர்பானம் | healthy pacchai pairu kulirpanam preparation in tamil

சத்தான பச்சை பயிறு குளிர்பானம் | healthy pacchai pairu kulirpanam preparation in tamil



அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது. வெயில் அனைத்து இடங்களிலும் சுட்டு எரிக்கிறது. வெயிலினால் நாவறட்சி ஏற்பட்டு தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கிறது. இந்த சமயத்தில் பலரும் குளிர்ச்சியாக ஜில்லென்று ஏதாவது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி குடிக்க விருப்பம் இருப்பவர்கள் அதை ஆரோக்கியமான குளிர்பானமாக குடித்தால் இன்னும் உடலுக்கு நன்மை தரும் அல்லவா? அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான குளிர்பானத்தை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்பச்சைப்பயிறு – ஒரு கப்துருவிய தேங்காய் – ஒரு கப்ஏலக்காய் – 3,உப்பு – ஒரு சிட்டிகைதண்ணீர் – 6 கப்நாட்டுச்சக்கரை – 3/4 கப்பருப்பு வகைகள் – விருப்பத்திற்கு ஏற்ப – Advertisement -செய்முறைமுதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு பச்சைபயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை குறைந்த தீயில் வைத்து குறைந்தபட்சம் ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வரை பொறுமையாக வருக்க வேண்டும். இது கருகக் கூடாது. நிறம் முற்றிலுமாக மாறி சிவக்க வேண்டும். அந்தளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள். நன்றாக இது வறுபட்ட பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இது முற்றிலும் ஆறிய பிறகு தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.கழுவிய இந்த பச்சை பயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் துருவிய தேங்காய், உப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் நம்முடைய வீட்டில் என்ன பருப்பு வகைகள் இருக்கிறதோ முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு என்று எது இருக்கிறதோ அதை பாலில் ஊற வைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது முதலில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி இதன் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். – Advertisement – மீதம் இருக்கக்கூடிய சக்கையை மறுபடியும் மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் இந்த சக்கையை போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைத்து வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி நாம் தேங்காய் பால் எடுப்போமோ அதேபோல் இந்த பச்சை பயிர் பாலையும் நாம் எடுக்க வேண்டும். இப்பொழுது நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் இதனுடன் நாம் தண்ணீரை கலந்து கொள்ளலாம். பிறகு இதில் முக்கால் கப் அளவிற்கு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். நம்முடைய தேவைக்கேற்றார் போல் ஐஸ்கட்டிகளையும் சேர்த்துக் கொண்டால் போதும் குளிர் பானம் தயாராகிவிடும்.இதனுடன் நாம் சப்ஜா விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம், பாதாம் பிசினையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் நம்முடைய உடலுக்கு குளிர்ச்சியையும் சக்தியையும் தரக்கூடியதாக திகழும். ஒரு கண்ணாடி டம்ளரில் சப்ஜா விதைகள், பாதாம் பிசின், சில ஐஸ்கட்டிகளை போட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பச்சை பயிறு குளிர்பானத்தையும் அதில் ஊற்றி குடிக்கும் பொழுது இது உடலுக்கு குளிர்ச்சியையும் அதேசமயம் ஆரோக்கியத்தையும் தரும்.இதையும் படிக்கலாமே:பிஸ்கட் ஐஸ்கிரீம் ரெசிபிகடைகளில் விற்கக்கூடிய குளிர்பானங்களை குடிப்பதை தவிர்த்து விட்டு இப்படி வீட்டிலேயே ஆரோக்கியமான சத்தான குளிர்பானத்தை பருகுவதன் மூலம் வெயிலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும் உடலையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top