– Advertisement –
எப்பொழுதும் சமையல் அறையில் இருந்து தான் நம்முடைய ஆரோக்கியம் துவங்குகிறது. முக்கியமாக ஆரோக்கியமான மனிதனாக இருக்க நம்முடைய சமையல் அறையை எப்படி வைத்திருக்கிறோம்? என்பதை பொறுத்து தான் இருக்கிறது. இத்தகைய சமையலில் நம் உண்ணும் உணவில் தவிர்க்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் உண்டு. அவை யாவன? சமையலறையில் இருக்க வேண்டாத பொருட்கள் என்னெல்லாம்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
காலை உணவில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் சர்க்கரை! வெள்ளை சர்க்கரை உடலுக்கு கெடுதி. இதை காலை உணவில் நீங்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் காலை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக ஜாம் போன்ற பொருட்களில் இருக்கக்கூடிய சர்க்கரை நம் உடலை மந்தமாக்குகிறது. சர்க்கரை சேர்க்கப்பட்ட இந்த செயற்கை பழக்கூழ் நம் கிச்சனில் இல்லாமல் இருந்தால் நல்லது தான்.
– Advertisement –
இரண்டாவதாக நீண்ட நாட்கள் பதப்படுத்த வேண்டிய சாஸ் போன்ற பொருட்களும் நம் கிச்சனில் இல்லாததே நல்லது. எந்த வகையான சாஸ் சார்ந்த பொருட்களையும் அடிக்கடி நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைகிறது. பலரும் இந்த சாஸ் பாக்கெட்டுகளை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். அதன் எக்ஸ்பைரி டேட் கூட கவனிக்காமல் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த பாக்கெட்டுகளை உடனுக்குடன் நீங்கள் தூக்கி எறிந்து விடுவது நல்லது.
மூன்றாவதாக வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட மயோனைஸ். மயோனைஸ் ரீஃபைண்ட் ஆயில் அதிகமாக பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை நாம் வீட்டில் செய்தாலும் கூட நான்கைந்து நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதிக நாட்கள் இதனை வைத்து கொண்டிருப்பது உடலுக்கு நன்மை கிடையாது. எனவே இத்தகைய நாகரீக பொருட்களை ஆரோக்கியம் என்று நினைத்து சமையலறையில் பத்திரப்படுத்தாதீர்கள்.
– Advertisement –
முந்தைய காலங்களில் எல்லாம் டீ, காபி மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட நவநாகரீக நவீன பவுடர்கள் எதையும் பயன்படுத்தியது கிடையாது. எழுந்ததும் கூழ், கஞ்சி, சத்து மாவு கஞ்சி, கேழ்வரகு கஞ்சி போன்றவற்றை தான் பருகி வந்தனர். இதனால் அவர்களுடைய ஆரோக்கியமும் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருந்தது.
ஆனால் இப்பொழுது மாறிவிட்ட காலத்தில் இத்தகைய பொருட்களை எல்லாம் நாம் எழுந்ததும் முதல் வேலையாக கிச்சனுக்கு சென்று பயன்படுத்துவதால் ஆரோக்கியம் சீர்குலைகிறது. இத்தகைய பொருட்களையும் உங்கள் கிச்சனிலிருந்து முதலில் புறக்கணியுங்கள். அதற்கு பதிலாக சத்து மாவு கஞ்சி, கூழ், மோர் போன்றவற்றை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே:காட்டு யானை போல உடல் பலம் பெற மன்னர்கள் இந்த அரிசியை தான் சாப்பிட்டார்களாம்! அது என்ன அரிசி? இப்போதும் கிடைக்கிறதா? எப்படி சாப்பிட வேண்டும்?
நம் பாரம்பரிய உணவு முறைகளை மறந்து குழந்தைகளுக்கு கூட நாகரிகம் என்கிற பெயரில் பாலில் சிலவற்றை ஊற வைத்து உணவாக கொடுத்து வருகிறோம். இவையும் நம் கிச்சனில் இல்லாமல் இருப்பது நல்லது. சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை கிச்சனிலிருந்து அகற்றினாலே ஆரோக்கியம் வலுப்பெறும். இவற்றுக்கு பதிலாக தினமும் இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை அல்லது பேரிச்சம் பழம் போன்றவற்றை காலை உணவில் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவில் சிட்ரிக் ஆசிட் நிறைந்த ஏதாவது ஒரு ஜூஸ் பருகலாம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam