அட்சய திதி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

Qries

– Advertisement –

அக்ஷயம் என்றாலே பெருகுதல் என்று அர்த்தம். இதன் அடிப்படையிலேயே அக்ஷய திரி அன்று தங்கம் வெள்ளி வாங்கினால் அது அதிக அளவில் பெருகக்கூடிய யோகத்தை தரும் என்று வழக்கும் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி அன்றைய நாளில் நாம் துவங்கும் எந்த ஒரு புதிய செயல்களும் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்லும் என்பது ஐதீகம்.
அப்படியான அந்த நன்னாளில் நாம் வாங்கும் பொருள் தொடங்கும் தொழில் மட்டும் இன்றி, நம் இல்லத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்து என்றென்றைக்கும் செல்வ வாழ்க்கையை வாழக் கூடிய யோகத்தை அருளும் மந்திரங்கள் உண்டு. அது என்னென்ன மந்திரங்கள் என்பதை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
– Advertisement –

இந்த வருடம் அக்ஷய திரி ஆனது வரும் வெள்ளிக்கிழமை 10.5. 2024 அன்று வருகிறது. அன்றைய நாள் முழுவதும் இந்த திதி இருப்பதால் இந்த மந்திரத்தையும் அந்த நாளில் உங்களுக்கு எந்த நேரத்தில் சொல்ல முடியுமோ அந்த நேரத்தில் சொல்லலாம். இப்பொழுது அந்த மந்திரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
முதலாவதாக முதல் முழு முதல் கடவுளான கணேசனை மந்திரத்தை பற்றி பார்க்கலாம் ஓம் கணபதியே நமக என்ற இந்த மந்திரத்தை உங்களால் முடிந்த வரையில் சொல்லுங்கள். இந்த மந்திரத்தின் மூலம் தடைகள் நீங்கி உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அதிகரிக்கும்.
– Advertisement –

அடுத்ததாக லட்சுமி மந்திரம் ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண நம என்ற இந்த மந்திரத்தை ஜெபிப்பது மூலம் நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்பாக மாறும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி அட்சய திருதியை அன்று வழிபடக் கூடிய அன்னையும் லட்சுமி தேவி தான். அந்த நாளும் அவருக்குரிய வெள்ளிக்கிழமை ஆகையால் இந்த மந்திர வழிபாடு அன்றைய தினம் உங்களுக்கு பெரும் யோகத்தை தரும்.
“ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதி பதயேதனதான்ய ஸ்ம்ருத்திம்மேதேஹி தாபய ஸ்வாஹா” என்ற இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைத்து தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டு பணவரவு அதிகரிக்க கூடிய யோகத்தை பெறலாம்.
– Advertisement –

அதே போல் அன்றைய தினத்தில் விஷ்ணுவின் இந்த மந்திரத்தையும் சொல்லலாம். ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம என்ற இந்த மந்திரத்தை உச்சரிப்பது மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கி வாழ்வில் அமைதி பெருகும். அது மட்டும் இன்றி அனைத்து வெற்றிகளும் உங்களுடையதாக மாற விஷ்ணு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
ஐந்தாவதாக துர்க்கையின் இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள். ஓம் தும் துர்க்கையே நமஹ துர்கா தேவியானவர் இந்த பிரபஞ்சத்தின் காவலாக கருதப்படுகிறார். அட்சய திருதியை அன்று துர்கையின் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம்முடைய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி எதிரிகள் தொல்லை இல்லாமல் மன தைரியம் வலிமை இவற்றுடன் செல்வ செழிப்பாகவாழக் கூடிய யோகத்தை அருள்வார்.
இதையும் படிக்கலாமே: மன கஷ்டமும், கசப்பும் நீங்கி நிம்மதியாக வாழ வழிபாடு
அட்சய திருதியை நன்னாளில் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுடன் இந்த ஐந்து மந்திரங்களை தவறாமல் சொல்லி இந்த வருடம் முழுவதும் சுப போக வாழ்க்கை வாழ்வதற்கான யோகத்தை பெறலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

– Advertisement –

Qries
Scroll to Top